Kaiyodu Kai Serkkum |
|---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஹா ஓஹோ ஹ்ம் ஹ்ம்
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை
கையில் ஏந்தி வருக
ஆசையோடு சில நாணல் தேவதைகள்
நடனமாடி வருக
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
காலங்கள் சென்றாலும் நீயே தெய்வம்
கல்லாக நின்றாலும் நீயே தெய்வம்
தெய்வீக பண்பு நாம் கொண்டாடும் அன்பு
என் உள்ளம் பொன் என்று எந்நாளும் நம்பு
ஆஆஹா ஒஹோ லாலா ஆஹா
மஞ்சளோடு மணமாலை சூடி வரும்
நல்ல நாளும் வருக
மன்னனோடு ஒரு ராணி போல வரும்
இன்ப நாளும் வருக
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
பெண் வாழ்வில் செல்வாக்கு தன்மானமே
தன்மானம் தான் காக்கும் கல்யாணமே
நான் கண்ணீரை வெல்லும் ஒரு பெண்ணாக வேண்டும்
நான் பொன்னோடு பொட்டோடு தாயாக வேண்டும்
வேண்டும்வேண்டும்ம்ஹூம்ம்ஹூம்
பிள்ளையாடி வர செல்வம் கோடி பெறும்
நல்ல காலம் வருக
உள்ளம் போல இணை ஒன்று சேர்ந்துவிட
தெய்வம் காவல் தருக
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்