Kalamithu Kalamithu

Kalamithu Kalamithu Song Lyrics In English


பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரிராரிரி ஆரிர ராரோ
ஆரி ராரிராரோ
ஆரிராரிரி ஆரிரி ஆரோ
ஆரி ராரிரிரோ

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுத் தமிழ் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி தீராத தொல்லையடி

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

மாறும் கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது
தூக்கமென்பதேது
தான் நினைத்த காதலனை
சேர வரும் போது
தான் நினைத்த காதலனை
சேர வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது


மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும் போதும்
அன்னை என்று வந்த பின்னும்
கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கி கண் மறைந்து
காலம் வந்து தேடும்
கை நடுங்கி கண் மறைந்து
காலம் வந்து தேடும்
காணாத தூக்கம் எல்லாம்
தானாக சேரும் தானாக சேரும்

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

ஆரிராரிரி ஆரிர ராரோ
ஆரி ராரிராரோ
ஆரிராரிரி ஆரிரி ஆரோ
ஆரி ராரிரிரோஆரி ராரிரிரோ