Kalyana Naal Parkka |
|---|
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
வண்ண மணி மண்டபத்தில்
துள்ளி விழுவோமா
மந்திரத்தில் கண் மயங்கிப்
துள்ளி விழுவோமா
சொன்னவர்கள் சொன்னபடி
அள்ளி வருவோமா
தொட்டு வரும் தென்றலுக்கு
தூது விடுவோமா
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
கண்ணாடி பார்த்தபடி
கதை படிப்போமா
பொன்னான கன்னங்களில்
படம் வரைவோமா
நடந்ததை நினைத்தபடி
ரசித்திருப்போமா
நாளை இன்னும் அதிகம் என்று
தெரிந்திருப்போமா
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
சந்திரனைத் தேடிச் சென்று
குடியிருப்போமா
தமிழுக்குச் சேதி சொல்லி
அழைத்துக் கொள்வோமா
அந்திப் பட்டு வானத்திலே
வலம் வருவோமா
அங்கும் ஒரு ராஜாங்கம்
அமைத்திருப்போமா
இருவர் : கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
இருவர் : கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா