Kambanukku Kai Koduthu |
|---|
கம்பனுக்கு கை
கொடுத்து காவேரிக்கு
அன்னை எடுத்து செம்
பொன்னால் சிலம்பறுத்து
சாமிக்கு ஒரு குற தந்து
புஞ்சைல நஞ்சைல
பொன் விளையும் தஞ்சைல
புலி கொடிய ஏத்தி வச்சி புகழ்
கொடிய பறக்க விட்டு
ஏழைநாட்டு வல்லவரு
இசையோட ஆண்டுருந்தா
சோழ நாட்டு மன்னருங்க
சந்ததியில் வந்தவரு
ஆமா
புகழ் இருக்குது
பெயர் இருக்குது
ராசுபடியாட்சி தான்
எங்கு
ராசுபடியாட்சி தான்
விரல் அசைவில
ஊர் இருக்குது நீரு நிலம்
சாட்சி தான்
அந்த நீரு நிலம்
சாட்சி தான்
தெருமுனையில சிலை
இருக்குது அவர் பெருமைய அது
உரைக்குது ஊருக்கெல்லாம்
உலையும் வச்சி சோறிடுவார்
இலையும் வச்சி அவர் தான்
நம்ம சாமின்னு ஊரே ஒன்னு
கூடி நின்னு
கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம் ஹோய்
கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம் ஹோய்
தானத்துல உசந்த
தானம் அன்ன தானம்
உலகிலே சாமி போல
யாரும் அத செஞ்சதே
இல்ல
சூரியனும் அணைத்திடுமே
சாயுங்கால பொழுதுல சாமி
வீட்டு அடுப்பணைத்து
பார்த்ததே இல்ல
ஆட்சி படையாட்சி
செய்யும் ஊரு தான் இது சாதி
மத பேதம் எல்லாம் ஓடி போனது
கோதாண்டமும் குதிரையும் கைய
குலுக்குது சிலுவையும் தான்
சிநேகிதமா சேர்ந்து சிரிக்குது
ஏதும் இங்க பொதுவா
மனம் பழகும் ஒட்டு உறவா
அதுக்கு தகுந்த வழிய வகுத்த
அவர் தான் நம்ம சாமின்னு
ஊரே ஒன்னு கூடின்னு
கொட்டுங்கடா
உறுமி மேளம் ஓஹோ
தட்டுங்கடா புதிய தாளம்
ரே ரே ரே
கொட்டுங்கடா
உறுமி மேளம் ஓஹோ
தட்டுங்கடா புதிய தாளம்
ஹோய் ஹோய்
ஹோய் ஹுர்ரா
ஹோ ஓஓ ஹோ
ஹோ ஓஓ ஹோ
மணம் முடிக்க
மனம் இல்லாம
வாழ்ந்திருப்பவரு ஊர்
மக்கள தான் பெத்த புள்ள
போல் நெனைப்பாரு
தாழ்த்த பட்ட
சனங்களுக்கு தோள்
கொடுப்பவரு அந்த ஏழை
பாழை சிரித்திருந்தா இவர்
சிரிப்பாரு
நோயில்லாம நொடியும்
இல்லாம நூறு ஆண்டு ஊரை
ஆண்டு பூமி மீது சாமி வாழ
பட்டு கட்டுங்க டா
பூமி மீது சாமி வாழ
பட்டு கட்டுங்க டா
ராமையா அட சோமையா
அட வீரையா வடிவேலையா
உனக்கும் எனக்கும் நிழல
கொடுக்கும் அவர் தான் நம்ம
சாமின்னு ஊரே ஒன்னு கூடின்னு
கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம் அட்ரா சக்க
கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம்
புகழ் இருக்குது
பெயர் இருக்குது
ராசுபடியாட்சி தான்
எங்கு
ராசுபடியாட்சி தான்
விரல் அசைவில
ஊர் இருக்குது நீரு நிலம்
சாட்சி தான்
அந்த நீரு நிலம்
சாட்சி தான்
தெருமுனையில சிலை
இருக்குது அவர் பெருமைய அது
உரைக்குது ஊருக்கெல்லாம்
உலையும் வச்சி சோறிடுவார்
இலையும் வச்சி அவர் தான் நம்ம
சாமின்னு ஊரே ஒன்னு கூடி நின்னு
கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம் ஹோய் அப்படி
போடு
கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ நல்ல போடு
தட்டுங்கடா புதிய தாளம்
ஹோய்