Kana Karunguyile |
|---|
கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
காதல் கணக்கினிலே
கண்ணீர்தான் லாபமடி
ஆசைஉண்டானது
அதில் வீடுரெண்டானது
அடி கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
பூமியில் நாம் பிறந்த
ஜாதகம் மாறுது
என் விதி மேடை கட்டி
நாடகம் ஆடுது
வஞ்சியே உன் மனம்
என்னிடம் ஏன் வந்தது
வந்ததால் இத்தனை
துன்பமும் வாய்ந்தது
வேதனை சோதனை
யாரிடம் நான் சொல்வது
என் மனம் இன்றுதான்
அம்பலம் ஆனது
நீயும் இந்த துக்கத்திலே
நில்லு மறு பக்கத்திலே
நேரம் ஒரு காலம்
வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம்
கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
ஆசைஉண்டானது
அதில் வீடுரெண்டானது
கண்களில் நீர் வழிந்து
கன்னத்தில் ஓடுது
கற்பனை ஆயிரம்தான்
எண்ணத்தில் ஓடுது
வானமே இல்லையே
வெண்ணிலா என்னாவது
வளர்வதா தேய்வதா
யாரிடம் கேட்பது
பூ மரம் இல்லையே
பூங்கொடி என்னாவது
வாழ்வதா வீழ்வதா
யாரிடம் கேட்பது
இருந்தால் இனி
உன்னோடு தான்
இல்லையேல் உடல் மண்ணோடுதான்
மாலை இடும் வேளை
வரும் நாளை என்றுதான் வாழ்கிறேன்
கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
ஆசைஉண்டானது
அதில் வீடுரெண்டானது
அடி கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
காதல் கணக்கினிலே
கண்ணீர்தான் லாபமடி