Kanavilaavadhu Unnudan |
|---|
கனவிலாவது உன்னுடன்
கலந்து கூட வேண்டும்
நினைவிலே உனை இன்னுமா
நினைந்து வாட வேண்டும்
ஆர்வமோடு ஆடித் திரிந்த
அந்த நாட்கள்
தீர்ந்ததில்லை தாகம் தீர்க்க
ஏங்கும் பூக்கள்
ஏக்கம் தீர இதயம் வருடும்
இளமைக் காலமே
நானும் சேர்ந்து வாழ சேர்ந்து போடு
புதிய கோலமே