Kannama Kannama |
|---|
ஓ ஓ ஓ ஹோஹோஓ
ஹோஹோஒஒஹோஹோ
ஓ ஓ ஓ ஹோஹோஓ
ஹோஹோஒஒஹோஹோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
கண்ணம்மா கண்ணம்மா
ஒண்ணு நான் சொல்லலாமா
அடி உன்னைப் போல் பெண் எல்லாம்
துன்பம் தான் கொள்ளலாமா
இந்த உலகம் போற போக்கம்மா
பெண் தனியா வாழ ஆகுமா
வெறும் கலகம் போடும் ஊரிலே
ஒரு துணைதான் உனக்கு வேண்டுமே
கண்ணம்மா கண்ணம்மா
ஒண்ணு நான் சொல்லலாமா
அடி உன்னைப் போல் பெண் எல்லாம்
துன்பம் தான் கொள்ளலாமா
புத்தனுக்கு தேவை என்ன
வாழ்க்கைத் துணை வேண்டாமடி
சித்தனுக்கும் தேவை என்ன
பெண்ணின் துணை வேண்டாமடி
நம்மைப் போல மானிடர்க்கெல்லாம்
சுற்றம் இன்றி வாழ்வே ஏது
உன்னைப் போல பெண்களை எல்லாம்
குற்றம் சொல்லா ஊரும் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கொடிக்கோர் கம்புதான்
உள்ளதா இல்லையா சொல்
இது என்னம்மா என்னம்மா
வாழ்க்கையே வம்பு தான்
கொண்டதா முல்லையே சொல்
ஒரு துணைதான் உனக்கிருந்தால்
வரும் துன்பம் அதுவும் இல்லாமல் போகும்
கண்ணம்மா கண்ணம்மா
ஒண்ணு நான் சொல்லலாமா
அடி உன்னைப் போல் பெண் எல்லாம்
துன்பம் தான் கொள்ளலாமா
ஹோ ஊ ஊ ஹோ ஊ ஓஒ ஹோ ஊ
ஹோ ஒ ஓஒ ஊ ஊ ஓ
பயணம் செய்யும் வண்டியிலே
தலை மேல் ஏண்டி பாரம் பாரம்
பாரங்களை கீழே வைத்தால்
சுமந்தே வண்டி போகும் போகும்
எல்லோருக்கும் பாரம் உண்டு
இல்லாதவர் யார் தான் இங்கே
பொல்லாதவர் வாழும் ஊரில்
வேண்டும் துணை அன்பே அன்பே
ஆணைப் போல் பெண்ணைப் போல்
எதிலும் இரண்டு உள்ளதா இல்லையா சொல்
இங்கு இணையாய் துணையா இணைந்தே இருந்தால்
தவறே என்னம்மா சொல்
மயங்காதே மறுக்காதே
இனி இன்பம் துன்பம் ரெண்டாகிப் போகும்
கண்ணம்மா கண்ணம்மா
ஒண்ணு நான் சொல்லலாமா
அடி உன்னைப் போல் பெண் எல்லாம்
துன்பம் தான் கொள்ளலாமா
இந்த உலகம் போற போக்கம்மா
பெண் தனியா வாழ ஆகுமா
வெறும் கலகம் போடும் ஊரிலே
ஒரு துணை தான் உனக்கு வேணுமே
கண்ணம்மா கண்ணம்மா
ஒண்ணு நான் சொல்லலாமா
அடி உன்னைப் போல் பெண் எல்லாம்
துன்பம்தான் கொள்ளலாமா