Kannamma Kanvizhi

Kannamma Kanvizhi Song Lyrics In English


கண்ணம்மா கண்விழி
கண்ணீர் தான் என் மொழி
நீ இல்லா வானத்தின்
நீளம் தான் என் வலி
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்
வேறு என்ன வேண்டும்

கண்ணம்மா கண்விழி
கண்ணீர் தான் என் மொழி
நீ இல்லா வானத்தின்
நீளம் தான் என் வலி
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்
வேறு என்ன வேண்டும்

விண்மீன்கள்
தங்கி செல்லும் வீடு
வெண் இறகில் கட்டி வைத்த
கூடு இது
உன்னாலேஉன்னாலே
இன்றானது இருள் வாழும் காடு

அன்பில் நீ
என்னை சூழ்ந்த கங்கை
அந்நதியில் மூச்சடைத்த
என் வாழக்கை இனி
எந்நாளும் உன்னாலே
நான் ஆவேன் காற்றிழந்த யாக்கை


இது கனவாய் மாறி
நீ வருவாய்
என தினம் தினம் விழிப்போம்
உனக்கெனவே
அது வரை இவ்வாழ்வு அடர்வனமே
இனி எப்போது இப்பூமி
உயிர் பெறுமோ சொல்

கண்ணம்மா கண்விழி
கண்ணீர் தான் என் மொழி
நீ இல்லா வானத்தின்
நீளம் தான் என் வலி
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்
வேறு என்ன வேண்டும்