Kannanal Naan Imaiyaven |
|---|
எப்பிறவி எடுத்தாலும்
எங்கே நீ சென்றாலும்
கை பிடியில் உன்னோடு காலம் எல்லாம்
நான் வருவேன்
காலம் எல்லாம் நான் வருவேன்
கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்
கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்
கண்ணானால் நான் இமையாவேன்ஏன்ஏன்
மொழியானால் பொருளாவேன்
முள்ளானால் மலராவேன்
நீ மொழியானால் பொருளாவேன்
முள்ளானால் மலராவேன்
கிளியானால் கனியாவேன்
கேள்வியென்றால் பதிலாவேன்
கிளியானால் கனியாவேன்
நீ கேள்வியென்றால் நான் பதிலாவேன்
கண்ணானால் நான் இமையாவேன்ஏன்ஏன்
கடலானால் நதியாவேன்
கணையானால் வில்லாவேன்
நீ கடலானால் நதியாவேன்
கணையானால் வில்லாவேன்
உடலானால் உயிராவேன்
ஒலியானால் இசையாவேன்
உடலானால் உயிராவேன்
ஒலியானால் இசையாவேன்
நீ ஒலியானால் நான் இசையாவேன்
கண்ணானால் நான் இமையாவேன்ஏன்ஏன்
உள்ளம் என்பது உள்ளவரை
உன் மனமே என் பள்ளியறை
உள்ளம் என்பது உள்ளவரை
உன் மனமே என் பள்ளியறை
கல்லில் வடித்த சொல் போலே
அது காலம் கடந்த இன்ப நிலை
கல்லில் வடித்த சொல் போலே
அது காலம் கடந்த இன்ப நிலை
கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்
இருவர் : கண்ணானால் நான் இமையாவேன்ஏன்ஏன்