Kannil Thondrum Kaatchi Yaavum |
|---|
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
தொல்லை மாந்தர் சூழும் நாட்டில்
சுகம் எங்கே அடிமை வாழ்வில்
தொல்லை மாந்தர் சூழும் நாட்டில்
சுகம் எங்கே அடிமை வாழ்வில்
இல்லையென்பார் இல்லையென்னும்
இன்ப நாளைக் காண்போமா
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணே உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில்
சிறிதும் இன்பம் இல்லையே
உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில்
சிறிதும் இன்பம் இல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில்
காணும் யாவும் தொல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில்
காணும் யாவும் தொல்லையே
மனிதர் வாழ்வை மனிதர் பறித்து
வாழுங் காலம் மாறுமா
மனிதர் வாழ்வை மனிதர் பறித்து
வாழுங் காலம் மாறுமா
இனியும் நாட்டில் ஏழை செல்வன்
பேதம் யாவும் வாழுமா
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணே உனது காட்சியே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில்
காணும் யாவும் தொல்லையே
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே