Ketpadhellam Kaadhal Geedhangale |
|---|
கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே
கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே
காண்பதெல்லாம்
வாழ்க்கை வேதங்களேஏ
கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே
காண்பதெல்லாம்
வாழ்க்கை வேதங்களேஏ
கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே
கலைவாணர்கள் பொழியும்
கவிதையிலேஏஏஏஏ
கலைவாணர்கள் பொழியும்
கவிதையிலே
கனிவான தீந்தமிழ் ஓசையிலேஏ
கலைவாணர்கள் பொழியும்
கவிதையிலே
கனிவான தீந்தமிழ் ஓசையிலே
கடல் வீசும் அலை போலும்
மனமே ஆடுதே
கடல் வீசும் அலை போலும்
மனமே ஆடுதே
அன்பு நாடும் உயிர்கள் யாவும்
ஆசையில் நின்று பாடுதே
அழிவிலா ஞால முழுதும்
கேட்பதெல்லாம்
காதல் கீதங்களேஏஏஏஏ
தேன் மலரில் ஆடும் எழில் தனிலே
திறமை காணும் கவிஞர் உலகில்
கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
எல்லை இல்லாத இன்பம்
திசை எல்லாம் நிறைந்து கொஞ்சும்
இனிய மொழியில்
கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
வாலிபம் எனும் பருவம்
இவர்களின் மனதில்
மகிழ்வு தந்து
கலையுடன் புதுமையில் இணைந்து
கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
காவியம் நிறை சுகமே
கவிஞரின் ஜெகமே
கனிவு கூறும் பாடும் இன்ப சுவை
மகா மனிதர் இவர் தருவதான
தமிழ் அமுதே
இனிமை தருமே இவர்கள் மொழியில்
கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
தென்றல் வராத வனமே
இள மங்கை இல்லாத இடமே
இவர் மனதிலென்றும்
இடம் பெறுவதில்லை
கலையே இவர்கள் நிலையே
மானிரு விழி நகை மாதரே
மனமகிழப் பாடும் இவர் பாதையே
மதியிலார் அறிவு பெரும் சங்கீதமே
தருவார் செவி குளிரவே
காணவும் தரும் சுகமே
இளமையின் கனவே
இவர்கள் பொழியும் சுவையமுதே
கண்டால் அருகில் வந்தால்
அமுது கொண்டால்
கவலை அகன்றிடுமே
கனவிலும் நினைவிலும் இவர் வருவார்
கலை மலர் பலபல இவர் தருவார்
மகிழ்வுடனே நடமிடுவேன்
இவர் முன்னமே ஸ்வரமுடனே
கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே
காண்பதெல்லாம்
வாழ்க்கை வேதங்களேஏ
கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே