Koodi Vazhnthal Kodi Nanmai |
---|
இசை அமைப்பாளர் : தேவா
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூட்டு குடும்பம் தோப்பாகும்
குணமும் மனமும் அதில்தான் கூத்தாடும்
கோயில் போல வீட்டை எண்ணி
வாழும் குடும்பம் வளமாகும்
ஊரும் உறவும் தினமும் கொண்டாடும்
விண்ணிலேஏஏஏஏஏஏஏஏஏஏ
வெள்ளி மீன் கோடியே கூட்டமாய் வாழுதே
அந்த விண்ணைப் போல மண்ணில் வாழ்வோம்
எல்லோரும் ஒன்றாகவே
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூட்டு குடும்பம் தோப்பாகும்
குணமும் மனமும் அதில்தான் கூத்தாடும்
கூட்டு குடும்பம் ஒன்றில் தானே
அன்பு நெஞ்சம் அதிகம் இருக்கும்
வீட்டு வேலை குவியும் போதும்
ஆளுக்கொன்றாய் செய்தே முடிக்கும்
மணல் தனை சுமக்கும்
அணில் பிள்ளை போலவே
சின்ன சின்ன வேலைக்கே
பிள்ளை உண்டு வீட்டிலே
தாகம் வந்த நேரத்தில்
தண்ணீர் கொண்டு தருவாரே
தடம் மாறி போகும் போது
வழி காட்ட பெரியோர் உண்டு
பசி என்று சொல்லும் முன்னே
பரிமாறும் கைகள் உண்டு
ஒரு மரக்கூட்டிலே பறவைகள் போலவே
வாழ்வது ஆனந்தம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூட்டு குடும்பம் தோப்பாகும்
குணமும் மனமும் அதில்தான் கூத்தாடும்
வசதி படைத்த மனிதருக்கெல்லாம்
கூட்டு குடித்தனம் தேவையில்லை
நம்மை போன்ற நடுத்தர குடும்பம்
தனித்து வாழ்ந்தால் பலவித தொல்லை
பலமுள்ள சிங்கமோ தனிமையில் வாழுது
பலமற்ற மான்களோ கூட்டத்துடன் வாழுது
ஒன்று பட்டு வாழ்வதே ஏழைக்கு ஒரு பலமாகும்
தண்ணீரின் ஒற்றை துளியால் ஹ்ஹ
தாகங்கள் தீர்ந்தா போகும்
துளியாவும் ஒன்றாய் சேர்ந்தால்
நதியாக நாட்டை காக்கும்
கூட்டுறவு என்பதும் நாட்டுறவு என்பதும்
வீட்டுறவில் ஆரம்பம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூட்டு குடும்பம் தோப்பாகும்
குணமும் மனமும் அதில்தான் கூத்தாடும்
கோயில் போல வீட்டை எண்ணி
வாழும் குடும்பம் வளமாகும்
ஊரும் உறவும் தினமும் கொண்டாடும்
விண்ணிலேஏஏஏஏஏஏஏஏஏஏ
வெள்ளி மீன் கோடியே கூட்டமாய் வாழுதே
அந்த விண்ணைப்போல மண்ணில்
வாழ்வோம் எல்லோரும் ஒன்றாகவே