Kulunga Kulunga Ilamai

Kulunga Kulunga Ilamai Song Lyrics In English


இசையமைப்பாளர் : இளையராஜா



குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது
கொடி முல்லை நினைவாக இடையாட
குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா

குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது

இன்பக்கலை தத்துவ புத்தகம்
பெண்ணாக வந்திருக்கேன்
இச்சைகளின் உச்சக் கட்டங்களை
காட்டிட வந்திருக்கேன்

பட்டு மெத்தை போடட்டுமா
பூவை அள்ளி தூவட்டுமா
கட்டழகன் மார்பினிலே
காதல் சுகம் தேடட்டுமா
இந்திரன் சந்திரன்
மன்மதன் மந்திரம்
விளக்கம் சொல்லித் தரட்டுமா


குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது
கொடி முல்லை நினைவாக இடையாட
குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா

கெண்டைவிழி சித்திர பாவையே
பார்த்து ரசிக்கவில்லையா
வண்டாடும் தாமரை பொய்கையில்
நீச்சலடிக்கலையா

என் மடியில் நீ கிடக்க
உன் பிடியில் நான் சிவக்க
கண் மயங்கும் கோலத்திலே
கன்னி என்னை சேர்த்தணைக்க
ஆண் பிள்ளை சிங்கத்தின்
ஆசைகள் பொங்கட்டும்
துவக்கம் சொல்லிக் கொடுக்கவா

குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது
கொடி முல்லை நினைவாக இடையாட
குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா