Maalai Karukkalil Sad |
|---|
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்ததத்தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே
மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்ததத்தான் தேடுதோ
ஒன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு
ஒலகத்த கண்டு கொண்டேன்
ஒன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு
ஒறவொண்ணு கொண்டு வந்தேன்
நீ சிரிச்சா பூ உதிரும்
நீ அணைச்சா தேன் சிதறும்
செவ்வந்திப் பூவுக்கு சோகம் என்ன
சிங்காரக் கண்ணுக்குள் மேகம் என்ன
நீ சொல்லடி
மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்ததத்தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே
மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ
மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன்
கண்ணீரில் வந்ததம்மா
உறவுன்னு நீ சொன்ன சொல்ல நம்பி
உயிரொண்ணு வாழுதம்மா
நீ அழவோ பொன் மணியே
நீர் விழவோ கண் வழியே
கண்ணே நீ வாடாத நந்தவனம்
கண்ணீரத் தாங்காது இந்த மனம்
வா தேவியே
மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்ததத்தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே
மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்ததத்தான் தேடுதோ