Maaname Pradhaanam

Maaname Pradhaanam Song Lyrics In English


மானமே பிரதானம்
மானமே பிரதானம்
இதை நாம் மதித்து வாழ வேண்டும்
தன் மானமே பிரதானம்
இதை நாம் மதித்து வாழ வேண்டும்
தன் மானமே பிரதானம்
வாழ்வு வரினும் தாழ்வு வரினும்
வாழ்வு வரினும் தாழ்வு வரினும்
வையகத்தில் மாசில்லாத
மானமே பிரதானம்

மாடும் கன்றும் இருந்தாலும்
மக்கள் சுற்றும் நிறைந்தாலும்
கோடி செல்வம் குவிந்தாலும்
பட்டம் பதவியில் சிறந்தாலும்
இருந்தும் இல்லாதவரே
மானம் இழந்த பேர்கள் பதரே
அதனால் மானமே பிரதானம்

செல்வம் என்றும் நில்லாது
அது திரும்பப் பலநாள் செல்லாது
செல்வம் என்றும் நில்லாது
அது திரும்பப் பலநாள் செல்லாது
சென்ற மானம் திரும்பாது
கண்கண்ட உண்மை இது தவறாது
மானமே பிரதானம்

மானம் இழந்தால் அவமானம்ம்ம்
ஆஅஆஅஆஅஆஅஆஆ
மானம் இழந்தால் அவமானம்ம்ம்
மனிதன் காணும் வெகுமானம்
இதை மனதில் கொண்டு நிமிர்ந்து நின்று
இதை மனதில் கொண்டு நிமிர்ந்து நின்று
புகழைத் தேட வேணும்
உலகில் மானமே பிரதானம்


இதை நாம் மதித்து வாழ வேண்டும்
தன் மானமே பிரதானம்

மானமே பிரதானம்
தன் மானமே பிரதானம்