Maayi Maayi Magamaayi

Maayi Maayi Magamaayi Song Lyrics In English


ஹூஹோஓஓ
ஹூஹோஓஓ
ஹூஹோஓஓ
ஆஅஆஅஆஆஆஆ

மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்
திருவிழா இது திருவிழா

பாரி பாரி மொளப்பாரி
இதை வளத்தா நல்லத தருவாளாம்
ஒரு விழா இது பெருவிழா

மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி
மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி

பூவலங்காரிஇவ பொன்னு
கொடுக்கும் சிங்காரி

மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்
திருவிழா இது திருவிழா

பாரி பாரி மொளப்பாரி
இதை வளத்தா நல்லத தருவாளாம்
ஒரு விழா இது பெருவிழா

ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

முத்து பதித்தின
ரத்தினத் தேரு சுத்துது வீதியிலே
அந்த வானத்து மேலே
வரும் பௌர்ணமி போலே

பக்தி கொடுக்குற உத்தமியே
இவ வந்தது ஆதியிலே
அந்த சூரியன் போலே
அந்தச் சந்திரன் போலே

ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சொக்கி முகம் பார்த்தா
சொக்கி விழ வேணும்
தப்பு வழி போனா
சிக்கிக் கொள்ள வேணும்
தெருவில் நம்ம கோலம்
பூக் கோலம்

ஒரு மாவிளக்கு
எடுத்து படைக்கலாம்
அம்மன் கோயிலிலே


மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்
திருவிழா இது திருவிழா

குத்துவிளக்குல
முத்துமணிச் சுடர்
மின்னுற சாடையிலே
அந்த மாப்பிளை கண்ணு
கண்டு மயங்குது பொண்ணு

சித்திர வந்ததும் நிச்சயம்
பண்ணணும் ரத்தினமே ரதியே
நீ ரெண்டுல ஒண்ணு
அதை மனசுல எண்ணு

ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தெப்பக்கொள ஓரம்
தேடுறது யாரை
நித்தம் நிதம் பாடும்
மாமன் அவன் பேரை
சிறு பொண்ணு மனசெல்லாம்
ஓம் மேல

நான் ஆசை வெச்சா
கணக்கா நடக்குமே
அம்மனின் கோயிலிலே

மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்
திருவிழா இது திருவிழா

பாரி பாரி மொளப்பாரி
இதை வளத்தா நல்லத தருவாளாம்
ஒரு விழா இது பெருவிழா

மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி
மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி

பூவலங்காரி இவ பொன்னு
கொடுக்கும் சிங்காரி

மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்
திருவிழா இது திருவிழா

பாரி பாரி மொளப்பாரி
இதை வளத்தா நல்லத தருவாளாம்
ஒரு விழா இது பெருவிழா