Malarudhu Pudhu Naale |
|---|
மலருது புது நாளே
வளருது ஒளிதானே
உறவிங்க இதம்தானே
அதிசய வரம்தானே
மலருது புது நாளே
வளருது ஒளிதானே
உறவிங்க இதம்தானே
அதிசய வரம்தானே
அழகான நேசங்கள்
மாறாதினி தீராதினி
வேறேதும் தருமோ சுகம்
மெதுவாய் எதிர்காலம்
பூ பூக்குது மனம் வீசுது
வாராதோ பேரானந்தம்
ஆகாய நீலம்
தேயாது நாளும்
வானிங்கு விண்மீன் குளம்
ஆனந்த தீபம்
சாயாது வாழும்
வீடிங்கு ஓர் ஆலயம்
ஹாஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஆஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅ
பலவித கிளி தினமே
ஒரு மனம் அடைந்திடுமே
பல உறவுகள் ஒரு உயிரென
மறுகணம் இணைத்திடுமே
நிலவினில் பறந்திடவே
உறவுகள் துணை வருமே
சுடு வெயிலினில் கரு நிழலென
அனுதினம் அவசியமே
ஒரு தழுவலில் பல விரிசலும்
சிறு கனவென மறையாதோ
ஒரு நொடியினில் மன வருத்தமும்
பனி திரையென விலகாதோ
உறவுகளிங்கு மனதருகினில்
நிதம் வேண்டுமே
உலகினை இங்கு சுமந்திடும்
ஒரு பலமே
இமையினை இங்கு விழி இரண்டினை
அடை காக்குமே
உயிர் வரை இங்கு கலந்திடுமே
ஒரு நிஜமே
மலருது புது நாளே
வளருது ஒளிதானே
உறவிங்க இதம்தானே
அதிசய வரம்தானே
மலருது புது நாளே
வளருது ஒளிதானே
உறவிங்க இதம்தானே
அதிசய வரம்தானே
அழகான நேசங்கள்
மாறாதினி தீராதினி
வேறேதும் தருமோ சுகம்
மெதுவாய் எதிர்காலம்
பூ பூக்குது மனம் வீசுது
வாராதோ பேரானந்தம்
ஆகாய நீலம்
தேயாது நாளும்
வானிங்கு விண்மீன் குளம்
ஆனந்த தீபம்
சாயாது வாழும்
வீடிங்கு ஓர் ஆலயம்