Mella Mella |
|---|
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய் ம்ம்
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
துள்ளி ஓடும் மானைப் பார்த்து
துடியிடையில் கை சேர்த்து
துள்ளி ஓடும் மானைப் பார்த்து
துடியிடையில் கை சேர்த்து
பிள்ளை போலத் தூக்கிக் கொள்ளுவேன்
கூந்தல் பின்னலினால் விலங்கு போடுவேன்
பட்டு மெத்தை மஞ்சத்தின் மேல்
பவளம் போன்ற உன்னை வைத்து
பாய்ந்து சென்று கதவை மூடுவேன்
பட்டு மெத்தை மஞ்சத்தின் மேல்
பவளம் போன்ற உன்னை வைத்து
பாய்ந்து சென்று கதவை மூடுவேன்
வந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன்
வந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன் ம்ம்
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
இளமையான கிளியிரண்டு
உரிமையான உறவு கொண்டு
இன்பமோடு வாழ்வை ரசிக்கும்
இளமையான கிளியிரண்டு
உரிமையான உறவு கொண்டு
இன்பமோடு வாழ்வை ரசிக்கும்
அந்த நினைவினிலே உள்ளம் இனிக்கும்
அந்த நினைவினிலே உள்ளம் இனிக்கும் ம்ம்
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்