Nanaa Endrennai

Nanaa Endrennai Song Lyrics In English


நானா என்றென்னை பார்க்காதே
பார்த்தால் என் பின்னே வாராதே
வந்தால் என்னோடு சேராதே
சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே

கேட்கும் பாட்டில் அர்த்தம் இல்லையா
அர்த்தம் எல்லாம் தேவை இல்லையா
தேவை என்றால் நேற்றுக்கோடிப் போ
போகப் போகப் பாதை இல்லையா
பாதை தீர்ந்தால் வானம் இல்லையா
யெஹ் யெஹ் யெஹ் யெஹ்

நானா என்றென்னை பார்க்காதே
பார்த்தால் என் பின்னே வாராதே
வந்தால் என்னோடு சேராதே
சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே

நானென்று சொல்லும் போதே
சொல்லும் நான்காய் மாறிப் போகும்
மாறாத ஒன்றென்றால்
என் நண்பர் கூட்டம்தான்
கூட்டாக நாங்கள் சேர
சேரும் எங்கள் மேடை ஆகும்
மேடைக்கே மோட்சம்
நாங்கள் போடும் ஆட்டம்தான்

ஆடாதவன்
வாழாதவன்
இய்யே இய்யே தன்னானன்னா
இய்யே இய்யே தன்னானன்னா

நானா என்றென்னை பார்க்காதேஏ
பார்த்தால் என் பின்னே வாராதேஏ
வந்தால் என்னோடு சேராதேஏ
சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே

நானிங்கு உண்மை பேச
உண்மை கூடக் காதல் கொள்ளும்
காதல் தான் இங்கே உண்டு
மோதல் இல்லையே


மோதல் உண்டாகும் போதோ
உண்டில்லை என்றே நாம் கண்டோம்
கண்டில்லை காதல் ஒன்றை
நட்பை போல் இங்கே

நட்பில்லையே
உப்பில்லையே

ஆஹாஆஹாஆஹா
ஆஹாஆஹாஆஹா

நானா என்றென்னை பார்க்காதே
பார்த்தால் என் பின்னே வாராதே
வந்தால் என்னோடு சேராதே
சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே

கேட்கும் பாட்டில் அர்த்தம் இல்லையா
அர்த்தம் எல்லாம் தேவை இல்லையா
தேவை என்றால் நேற்றுக்கோடிப் போ
போகப் போகப் பாதை இல்லையா
பாதை தீர்ந்தால் வானம் இல்லையா
யெஹ் யெஹ் யெஹ் யெஹ்

ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ