Nee Uravaaga

Nee Uravaaga Song Lyrics In English


ஏலே ஏலே
நானும் மேலே
போறேன் காதல் நாள

நீ உறவாக ஆச
நான் வேறென்ன பேச

புயல் ஓயாம
வீச உடல் தானாக கூச
கேட்டேன் காதல் ஓச ஓ

நீ உறவாக ஆச
நான் வேறென்ன பேச

ஓர கண் பார்வை
ஏதேதோ பேச ஊதாரி
பையன் நானும்
ஆனேன் நல்லா

நாளும் உன்
வாசம் என் மேல வீச
ஆனேனே கோர புல்லும்
வான வில்லா

கண்ணால நீ
கிள்ள காயம் உள்ள
என்னாத்த நான்
சொல்ல ஓஹோ

சொல்லாமலே
தொல்ல ஆல கொல்ல
அல்லாடுறேன் புல்ல
ஓஹோ ஓஹோ

குப்ப கூலம்
பொன்னாச்சு குட்டியான
தேராச்சு ஆத்தாடி உன்னால
ஏதோ ஆச்சு


சோரும் செல்லாம
தூக்கம் இல்லாம ஏன் புள்ள
என்ன நீயும் ஆட்டி வெச்ச

கேட்கும் முன்னால
நீயும் தன்னால ஒன்னாக
வாழ போடு காதல் பிச்ச

என்னோடு நீ
வந்தா போதும் பொன்னே

இல்லனு நான்
சொன்னா ஓ ஓ ஓ ஓ

சேல கட்டும்
பூங்கொத்து உன்கூட
நின்னா தான் கெத்து
வேணாமே வேறேதும்
சொத்து பத்து

நீ உறவாக ஆச
நான் வேறென்ன பேச

புயல் ஓயாம
வீச உடல் தானாக கூச
கேட்டேன் காதல் ஓச