Oora Nenjila Thaangum Ungala |
|---|
வானமே பொழிஞ்சாலும்
பூமியே வெளைஞ்சாலும்
காலமும் ஒழைப்பவரே
கடவுள்ன்னு சொல்லிடுவோம்
மானமே நிலையாக
மண் உறவே பெரிதாக
வாழும் இந்த திரு நாட்டை
வளம் பெறவே செஞ்சிடுவோம்
வளம் பெறவே செஞ்சிடுவோம்
நாங்க வளம் பெறவே செஞ்சிடுவோம்
ஊர நெஞ்சில
தாங்கும் உங்கள
போற்றும் ஒரு நாலு
நாங்க நன்றியை மாலை காட்டியே
போடும் திரு நாலு
உங்களைத்தான் தெய்வமுன்னு
அட கும்பிடுவோம் கூடி நின்னு
வானம் போல வாழும் உங்க
கால தொட்டு பூஜை செய்யுறோம்
நாடறிய பறையை அடிடா
நாயகமா புகழ அடிடா
வான் அதிர தவில எடுடா
சூரியனை இரவா இழுடா
ஊர நெஞ்சில
தாங்கும் உங்கள
போற்றும் ஒரு நாலு
நாங்க நன்றியை மாலை காட்டியே
போடும் திரு நாலு
தாந்தன தான நானா
பூசாரி தைச்சது
ஆசாரி கொல்லது
இல்லாம இருந்த ஊரும் இல்ல
பிடி சோரேதும்
உணவை உழைக்கலானா
வரும் சோகம் தான்
அவனை மதிக்கலானா
ஊரான ஜோசியர்
குறிசொல்லும் வேதியர்
தோதாக கணிச்சா நோயும் இல்ல
ஒரு வண்ணாரு தொவைக்க
துணி வெளுக்கும்
அவர் முன்னால இருந்தே
எது நடக்கும்
ஆணவ அறியவைக்கும்
ஐயாவை விட்டக்கா
படிப்பு இல்லையே
வாழ்வோரை கடைசியிலே காடேத்த
என்னாட்டி சிறப்பு இல்ல
நாடறிய பறையை அடிடா
நாயகமா புகழ அடிடா
வான் அதிர தவில எடுடா
சூரியனை இரவா இழுடா
ஏராள சம்பளம்
ஏதேதோ கிம்பளம்
எங்கேன்னு அலைஞ்சு
ஊற விட்டோம்
பல நாளாக உறவை
மறந்திருந்தோம் பகல் ராவாக
பெருசா வளர்ந்திருந்தோம்
ஆனாலும் எங்களை
நீங்காத அன்புள்ள
ஒண்ணாக்க துணிஞ்ச ஜல்லிக்கட்டு
வெறும் மண்ணாக கிடந்தோம்
சொரணை கெட்டு
வெதை நெல்லாக நிமிர்ந்தோம்
விளங்கி கிட்டு
கார் ஓடும் நகரத்துல
எல்லாமே பொய்யாக நடக்குதுங்க
சேர் ஓட மனத்துல தான்
நம்மோட பண்பாடு இருக்குதுங்க
நாடறிய பறையை அடிடா
நாயகமா புகழ அடிடா
வான் அதிர தவில எடுடா
சூரியனை இரவா இழுடா