Ovvoru Pillaiyum

Ovvoru Pillaiyum Song Lyrics In English


ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே

ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே

மிருக நிலையோஓ
தெய்வ நிலையோஓ
மிருக நிலையோ
தெய்வ நிலையோ
இறுதி வடிவம் எந்த நிலையோ
சூழ்நிலை சொல்லிய விதிப்படி
வாழ்க்கையும் வடிவெடுக்கும்

ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதேஏ

வாழ்க்கையின் ஆதி எங்கே
யார் கண்டுபிடித்தது
வாழ்க்கையின் அந்தம் எங்கே
யார் எல்லை வகுத்தது

புத்தியால் வாழ்கவென்றே
ஞானங்கள் அழைக்குது
கத்தியால் வாழ்கவென்றே
காலங்கள் விதிக்குது

பூப் பறிக்கும் வாழ்க்கை கேட்டாய்
பாம்படிக்கும் வாழ்க்கை கொண்டாய்
முத்து மூட்டை வாங்கச் சென்றாய்
உப்பு மூட்டை வாங்கி வந்தாய்

விதி என்ற ஆற்றில்
நீ ஒரு துரும்பு
வேதங்கள் சொல்லும்
அமைந்ததை நீ விரும்பு

ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே
தோம் தோம் தோம்

ம ப ப
ம ப ட ப ப ப
ம ப நி ட ச ப
ப ப ம ட ப ம க
ம ப ப
ம ப த ப ப ப
ம ப நி ட ச ப
ப ப ம ட ப ம க


ச ரி க ச ச
ம ம க ரி ச
ச ரி க ச ச
ச நி ட ப ம

பெண் தோம் தோம் தனா
தோம் தோம் தனா
தோம் தோம் தனா
தோம் தோம் தோம் தோம் தோம் தோம்தோம்
தோம் தோம் தோம் தோம் தோம் தோம்தோம்

கனவிலே ஓடி ஓடி
பூ மஞ்சம் அமைக்கிறாய்
முதுகிலே ஆணிகுத்தி
முள்மேலே படுக்கிறாய்
ஆஆஆ

சாவியைத் தேடித் தேடி
நீ மண்ணில் அலைகிறாய்
சாவியைக் கண்டெடுத்து
நீ மண்ணில் தொலைகிறாய்

பிஞ்சு வயதில்
பட்ட காயம்
நெஞ்சு நடுவில்
இன்னும் எரியும்
காயமெல்லாம் ஆறும் போதும்
தழும்பு மட்டும்
சாட்சியாகும்

காயத்தை துடைத்து
கலக்கத்தை நிறுத்து
களங்களை மாற்றி
புது யுத்தம் நீ நடத்து

ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே

மிருக நிலையோஓ
தெய்வ நிலையோஓ
மிருக நிலையோ
தெய்வ நிலையோ
இறுதி வடிவம் எந்த நிலையோ
சூழ்நிலை சொல்லிய விதிப்படி
வாழ்க்கையும் வடிவெடுக்கும்