Paalnilavu Neram Parkavillai |
|---|
பால் நிலவு
நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா
பால் நிலவு
நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா
ததும்பிடும் மதுக்குடம்
தனை எடுத்தொருதரம்
பருகிட வருகையில் மறைப்பதென்ன
உதடுகள் எழுதிடும் புதுப் புதுக் கதைகளை
முதல் முதல் படித்திட மறுப்பதென்ன
படுக்கையறை பாடங்கள்
பழக என்ன ஊடல்கள்
எதற்கு இந்த நாணங்கள்
விருந்தை விடுவேனோ விலகுவது ஏனோ
ஓஹோ யூ கான்ட் எஸ்கேப் கிஸ் மீ
டோன்ட் மிஸ் மீ டார்லிங்
ஹ்ம்ம் ஹஹஹஹா
பால் நிலவு
நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா
உடையிலும் நடையிலும்
உருவத்தை மறைத்தொரு
நவரச நாடகம் நடிப்பதென்ன
இடை கொண்ட கனிகளை
இடம் கண்டு பறித்திட
இளமனம் இதுவரை துடித்ததென்ன
நடந்த வரை விளையாட்டு
தெரிந்த பின்பு பாராட்டு
மடியில் என்னைத் தாலாட்டு
மயங்கி விட வேண்டும் மணி விழிகள் நான்கும்
ஓஹோ டோன்ட் டீஸ் மீ
யூ நாட்டி பாய்
பால் நிலவு
நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா