Pala Kodi Pengalilay

Pala Kodi Pengalilay Song Lyrics In English


பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்
உனை பாா்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்

ஆயிரம் ஆண்கள்
ஊாினிலே உன் முகம்
மட்டும் கண்களிலே

காலம் எல்லாம் உன்
அருகிலே அழகிலே

பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்
உனை பாா்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்

என்னில் அறிவியல்
உன்னில் அழகியல் பின்னி
பிணைவதால் களவியலே

நம்மில் இருப்பது
நல்ல விதியியல் உள்ளம்
உரசினால் உளவியலே

பூலோகம் எங்கும்
இல்லாத புவியியலே உன்
தேகம் அதில் நான் கண்டு வியந்தேன்

வேறெந்த ஆணும்
சொல்லாத இயற்பியலை
நீ சொல்ல கேட்டு நான்
கொஞ்சம் அசந்தேன்

ஒவ்வொரு நொடியும்
புதிதாய் உணா்ந்தேன் பாலை
வனத்திலே பாலை நடுவிலே
பூத்த மலா் என என்னில் மலா்ந்தாய்


உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை உந்தன்
விழிகளில் என்னை அளந்தாய்

என் கைகள் இன்று
உன் ஜன்னல் உடைக்கிறதே
என் காதல் வந்து உன் மீது படற

என் வானம் இன்று
உன் மீது சாிகிறதே என்
வானவில்லில் உன் சாயம் தொிய

ஏதேதோ மாற்றம்
எனக்குள் நடக்க

பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்
உனை பாா்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்

ஆயிரம் ஆண்கள்
ஊாினிலே உன் முகம்
மட்டும் கண்களிலே

காலம் எல்லாம் உன்
அருகிலே அழகிலே