Payanam Payanam

Payanam Payanam Song Lyrics In English


பயணம் பயணம் பயணம்
பத்துமாத நித்திரை கண்டு ஜனனம்
அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்
அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்

பயணம் பயணம் பயணம்

ஆரம்பப் பள்ளிக்கு பயணம்
பின்பு அடுத்தது ஆசையின் பயணம்
ஆரம்பப் பள்ளிக்கு பயணம்
பின்பு அடுத்தது ஆசையின் பயணம்
இளங்காதலர் கண்களில் பயணம்
அந்தக் கலக்கத்தில் கண்ணீரில் பயணம்
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
எவரை எவர் வெல்லுவாரோ

பயணம் பயணம் பயணம்

புகை வண்டி ஓட்டிட ஒருவன்
அது போகின்ற வழி சொல்ல ஒருவன்
அந்த இருவரை நம்பிய மனிதன்
அவன் இடையினில் நினைப்பவன் இறைவன்
இறைவனும் மனிதனும் பயணம் செய்தால்
எவரை எவர் வெல்லுவாரோ
எவரை எவர் வெல்லுவாரோ


சந்திப்பு வருவது கண்டு
பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு
அவர் சொந்தங்கள் ஆவதும் உண்டு
அது தொடர்கதை ஆவதும் உண்டு
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
எவரை எவர் வெல்லுவாரோ

பயணம் பயணம் பயணம்
பத்துமாத நித்திரை கண்டு ஜனனம்
அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்
அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்

பயணம் பயணம் பயணம்