Podhum Nee Ini Varundhadhe |
|---|
போதும் நீ இனி வருந்தாதே
நேரங்கள் அது திரும்பாதே
இன்றை மட்டும் தேர்ந்தெடு
ஊஊஹோ
இந்த நொடி வாழ்ந்திடு
ஊஊஹோ
மாறாமல் நிலை இருக்காதே
தூறாமல் மழை துவங்காதே
நேற்று அது தீரத்தான்
பபப்பாபா
நாளை அது தேடத்தான்
காலம் இருக்கு நீ களித்திடு மறந்து
காலால் உதைத்து உன் கவலைக்கு கை காட்டு
ஓஓஓஓஒ
ஓஓஓஓஒ
வருவதை எதிர் எதிர் பார்த்துவிட்டு
இருப்பதை உணர்த்திட மறந்து விட்டோம்
கவலையில் தொலைவதை விலக்கி விட்டு
பரவச புதையலில் புதைந்திடுவோம்
ஹே முட்டி முட்டி மோதிடத்தான்
பூமியில் விதை முளைக்கும்
ஹே வெட்டி வெட்டி செதிக்கிடத்தான்
பாறைகளும் மினுக்கும்
இன்றே இருக்குஇதை நீ விரும்பு
இரவை கலைத்து இனிமைகள் கொண்டாடு
நேரங்கள் பிரிந்தா பறந்திருக்கு
நாமிங்கு ஒளிந்திட விலகிருக்கு
சொந்தமாய் முகத்துக்கு சிரிப்பிருக்கு
சுதந்திர இதழ் ஏன் தயங்கிடுது
உன் இதயம் துடிக்கிறது
உனக்குள் இசை இருக்கு
உற்று கொஞ்சம் நீ கேளு
உன்னை சுற்றி இசை இருக்கு
பாதம் எடுத்து நீ பறந்திடு மறந்து
நாடி துடித்து நடனங்கள் நீ ஆடு
போதும் நீ இனி வருந்தாதே
நேரங்கள் அது திரும்பாதே
இன்றை மட்டும் தேர்ந்தெடு
ஊஊஹோ
இந்த நொடி வாழ்ந்திடு
ஊஊஹோ
மாறாமல் நிலை இருக்காதே
தூறாமல் மழை துவங்காதே
நேற்று அது தீரத்தான்
பபப்பாபா
நாளை அது தேடத்தான்
காலம் இருக்கு நீ களித்திடு மறந்து
காலால் உதைத்து உன் கவலைக்கு கை காட்டு
ஓஓஓஓஒ
ஓஓஓஓஒ