Poove Chinna Poove |
---|
பாடலாசிரியர் : வாலி
பூவே சின்ன பூவே என்ன சேதி மாலை சூடும் வேளை எந்த தேதி மலர் பன்னீரில் ஆடும் நேரம் அல்லவோ மனம் வெந்நீரில் வாடும் தாபம் சொல்லவோ
உன்னை நான் தான் சூட வேண்டும் மடி ஊஞ்சல் ஆட வேண்டும் இதழ் முன்னாலும் பின்னாலும் எந்நாளும் உண்டாகும் தேனோ
பூவே சின்ன பூவே என்ன சேதி மாலை சூடும் வேளை எந்த தேதி
பழமுதிர்சோலை கண்டேனே பறவையைப் போலே வந்தேனே பொன்மானே பழமுதிர்சோலை கண்டேனே பறவையைப் போலே வந்தேனே பொன்மானே தொடுமோ விரல் படுமோ அடடா அங்கம் சுடுமோ
கொதித்தது மீண்டும் ஆறாதோ மறுபடி மோகம் வாராதோ தழுவ தழுவ நழுவ நழுவ கொடியிடை அம்மாடி என்னாவதோ
பூவே சின்ன பூவே என்ன சேதி மாலை சூடும் வேளை எந்த தேதி மலர் பன்னீரில் ஆடும் நேரம் அல்லவோ மனம் வெந்நீரில் வாடும் தாபம் சொல்லவோ
உன்னை நான் தான் சூட வேண்டும் மடி ஊஞ்சல் ஆட வேண்டும் இதழ் முன்னாலும் பின்னாலும் எந்நாளும் உண்டாகும் தேனோ
எனக்கொரு பாடம் நீ சொல்ல இலக்கணம் மீறும் பெண்ணல்ல அன்பே வா எனக்கொரு பாடம் நீ சொல்ல இலக்கணம் மீறும் பெண்ணல்ல அன்பே வா நிலம் நீ விழும் மழை நான் சுரம் நீ எழும் இசை நான்
அபிநயம் காட்டும் உன் பார்வை கவி நயம் தீட்டும் என் பார்வை இரண்டு மனமும் இரவும் பகலும் புதுப்புது சங்கீதம் கொண்டாடுமோ
பூவே சின்ன பூவே என்ன சேதி மாலை சூடும் வேளை எந்த தேதி மலர் பன்னீரில் ஆடும் நேரம் அல்லவோ மனம் வெந்நீரில் வாடும் தாபம் சொல்லவோ
என்னை நீதான் சூட வேண்டும் மடி ஊஞ்சல் ஆட வேண்டும் இதழ் முன்னாலும் பின்னாலும் எந்நாளும் உண்டாகும் தேனோ
இருவர் : லாலா லால்ல லாலா லால்லா லாலா லால்ல லாலா லால்லா