Poove Enna Porattam |
|---|
பூவே
பூவே என்ன போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
காதல் பொங்கும் முல்லையே
கண்ணில் ஜீவன் இல்லையே
வானமுடைந்து போக கூடும்
உள்ளமுடைந்து போகாதே
வானமுடைந்து போக கூடும்
உள்ளமுடைந்து போகாதேபூவே
நெஞ்சில் போராட்டம்
கண்ணில் ஒரு நீரோட்டம்
காவல் கொல்லும் என்னையே
உன்னில் வாழும் முல்லையே
கண்ணை விட்டு ஜீவன் போகும்
என்னை விட்டு போகாதே
கண்ணை விட்டு ஜீவன் போகும்
என்னை விட்டு போகாதே
பூவே
இந்த காதல் ஓவியத்தை காணாமல்
எந்தன் கண்கள் துரு பிடிக்க கண்டேனே
ஓஒ உந்தன் கீத வார்த்தைகளை கேளாமல்
சிலகாலம் செவியிழந்து போனேனே
பண்பாடு சிங்காரி
லலலா
இது பாட்டு கச்சேரி
லலாலாலலாலாலலாலா
பண்பாடு சிங்காரி இது பாட்டு கச்சேரி
உன் கட்டுப்பாட்டை தூக்கியெறி
கங்கைக்கென்ன கட்டுத்தறிபூவே
நெஞ்சில் போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ரெண்டு வீட்டுச் சண்டை தந்த பொல்லாப்பு
தங்க முகத்தை காட்டவில்லை முல்லைப்பூ
ஓஓஓ உன்னை பார்த்து பேச நெஞ்சில் வீராப்பு
உங்கள் வீட்டு ஜன்னல் எங்கும் மாராப்பு
என் காதல் கண்ணாளா
லலலா
என் வாழ்வில் பொன்னாளா
லலலாலலாலாலலாலா
என் காதல் கண்ணாளா என் வாழ்வில் பொன்னாளா
நீ சொல்லிவிட்டால் வானம் விட்டு
வந்துவிடும் இந்த நிலா
பூவே
நெஞ்சில் போராட்டம்
கண்ணில்
ஒரு நீரோட்டம்
காதல் பொங்கும் முல்லையே
கண்ணில் ஜீவன் இல்லையே
கண்ணை விட்டு ஜீவன் போகும்
என்னை விட்டு போகாதே
வானமுடைந்து போக கூடும்
உள்ளமுடைந்து போகாதே
பூவே