Punnagaiye |
|---|
புன்னகையே
சிறு பூங்கிளியே
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
புலி நீநீ
புயல் நீநீ
விதியாயாஆ
சாதியாயாஆ
அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
துணை ஒன்னு இல்லாமலே
ஒத்த உசுரு அலைமோதுதே
எரியுற காட்டுக்குள்ளே
ஒரு எறும்பு வழி தேடுதே
பட்டிக்காட்டுப் பொண்ணு சொல்லு
பார்லிமென்டில் கேட்குமா
காட்டு சிங்கம் முயலக் காக்க
கடிதம் கொடுக்குமா
கஞ்சி போட்ட காக்கி சட்டை
கைத்தறிய பாக்குமா
வேலு நாச்சி வம்சக்காரி
வீரம் போகுமா
துணிஞ்ச தீ இது
குனிஞ்சு எரியுமா
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
புலி நீநீ
புயல் நீநீ
விதியாயாஆ
சாதியாயாஆ
அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது
ஆண் மற்றும் புன்னகையே
புயலாய் மாறும்போது
ஆண் மற்றும் சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
இலக்கை அடையாமலே
இவள் இதயம் அடங்காதடா
விலங்கு உடையாமலே
இவள் வளையல் உடையாதடா
இவளும் கூட இந்திய ரத்தம்
அரசமைப்பு சொல்லுது
ஈ எறும்பும் வாழத்தானே
பூமி உள்ளது
அருங்கம்புல்லும் நனைய தானே
அந்த மேகம் பெய்யுது
அழுத ஜாதி மீளத் தானே
அரசு உள்ளது
அழுத பிள்ளைதான்
பால் குடிக்குது
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
ஆண் மற்றும் புலி நீநீ
புயல் நீநீ
விதியாயாஆ
சாதியாயாஆ
அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது
ஆண் மற்றும் புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு