Sandhana Poongkaatrae

Sandhana Poongkaatrae Song Lyrics In English


சந்தன பூங்காற்றே
சந்தன பூங்காற்றே என்
இளமையின் கனவினை
திமிர் என உரைத்தது யார்
என் சரிகம சிரிப்பினை
சிறையிட நெய்தது யார்
நான் எல்லை தாண்டி விட
வில்லை கூண்டுக்குள்ளும்
இல்லை

பூ போலே பிறந்து
நதி போல துள்ளி திரிந்து
தினம் தென்றல் போலே
வாழ்ந்தால் ஆனந்தம் ம்ம்ம்

தம் தம் தம் நா நா
நும் நா நா தம்த நம்த நா
நா நும் நா நா நும் தம் நம்
தம் நம் தம் நா நா நும்

எனக்கொரு ஆசை
உனக்கொரு ஆசை
உதடுக்குதடு புது புது
பாஷை குற்றம் என்றே
இதை சொல்வாரோ

மலைகள் வேறு
கரைகள் வேறு கூண்டுகள்
வேறு கூடுகள் வேறு ரெண்டும்
ஒன்றே என்று சொல்வாரோ

புரியும் வரை தான்
மனதின் மயக்கம் சரியா
தவறா என்று ஏங்காதே

தவறே ஒரு நாள்
சரியாய் தெரியும் வாழ்க்கை
இது தான் அலைபாயாதே

வாழ்க்கை என்னும்
உலகு அது மாறு பட்ட அழகு
பொன் வானின் அளவு என்
அந்தரங்க கனவு

சந்தன பூங்காற்றே
சந்தன பூங்காற்றே என்
இளமையின் கனவினை
திமிர் என உரைத்தது யார்
என் சரிகம சிரிப்பினை
சிறையிட நெய்தது யார்


பனி விழும் பார்வை
பரம்பரை நாணம் தணிந்திடும்
கோவம் திருமண ஆசை
பெண்ணில் எல்லாம் எதை
பார்த்தேனே

இலக்கணம் இல்ல
இலக்கியம் நானே
விழிகளுக்கெல்லாம்
அதிசயம் ஆனேன்
மௌனத்தின் நான்
இசை கேட்பேனே

உறவில் கலந்து
கருவை சுமந்து உயிரை
படைக்கும் பெண்கள்
தெய்வங்களே

பூஜைகளும் வேண்டாம்
சிறைகளும் வேண்டாம்
பெண்ணை பெண்ணாய்கொஞ்சம்
பாருங்களேன்

ஓர் நாளே இருக்கும்
சில பூவை வண்டு மணக்கும்
உள்ளங்கள் கலந்தால் இங்கு
வாழ்வில் அர்த்தம் இருக்கும்

சந்தன பூங்காற்றே
சந்தன பூங்காற்றே நான்
இயக்கிட வந்தது திரை பட
உலகத்திலே நான் எழுதிய
திரை கதை ஜெயித்தது
நிஜத்தினிலே ஒரு பொய்யில்
வெற்றி அடைந்தாலும் கண்ணில்
இல்லை தூக்கம்

என் பாதை சரியா
இது காலம் செய்த பிழையா
என் நெஞ்சம் எங்கும் ஏதோ
ஆதங்கம்