Seramal Ponal

Seramal Ponal Song Lyrics In English


மழை பொழிந்திடும்
நேரம் ஒரு குடையில் நாமும்
நடப்பதை எதிர் காணும்
கனவுகள் பிழையா

வரம் ஒன்று
கொடு போதும் கலவரங்களும்
தீரும் தனி மரம் என நானும்
இருப்பது முறையா

என் தாரகை நீ
தானடி கண் விழியால்
கொல்லாதடி தல்லாதடி
கை விரலால்

சேராமல் போனால்
வாழாமல் போவேன் உன்னை
காணமால் போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
பெண் பூவே

நடு வெயிலில்
கடல் கரையில் படகடியில்
இணைந்திடவா நடு இரவில்
அடை மழையில் சாலை
வழியில் இணைந்திடவா

ஜன்னல் வழியில்
மின்னல் புகுந்த நொடிகளிலும்
இணைந்திடவா கட்டில்
அறையில் காலை வரையில்
போர்வை சிறையில்
இணைந்திடவா


நீ இன்றி நானும்
நான் இன்றி நீயும் வாழும்
வாழ்க்கை ஏனடா அன்பே
நீயும் சொல்லடா

நீர் இன்றி வானும்
வான் இன்றி நீரும் இருந்தால்
உலகம் ஏதடி பெண்ணே புரிந்து
கொள்ளடி

சேராமல் போனால்
வாழாமல் போவேன் உன்னை
காணமால் போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
என் அன்பே

ஆண் & சேராமல் போனால்
வாழாமல் போவேன் உன்னை
காணமால் போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
பெண் பூவே