Sila Per Vazha

Sila Per Vazha Song Lyrics In English


பாரினில் ஆதியில் பேதமே இல்லை
பாதியில் வந்ததே தொல்லை
ஏருழுவோன் பேருக்கே பூமி என்று
எழுதிடுவோம் சாசனமே சாசனமேஏஏஏ

ஹே

சில பேர் வாழ பல பேர் உழைக்கும்
நிலைமையும் சரிதானோ
மனித நீதி இதுதானோ
நாட்டில் நீதி இதுதானோ
இந்த நிலைமையும் சரிதானோ

கண்ணீர் சிந்தும் பாட்டாளி ரத்தம்
பன்னீராவது முறையோ
ஏழையின் நீதி இதுதானோ
நாட்டில் நீதி இதுதானோ
இந்த நிலைமையும் சரிதானோ
இந்த நிலைமையும் சரிதானோ

வானிலே பறவைகள் இனமே
உரிமையாகவே பறந்திடும் அழகினைப் பார்
மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார்
மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார்
அடிமை நிலையில் மனிதனைப் பார்
அடிமை நிலையில் மனிதனைப் பார்

ஏழையின் வாழ்வே செல்வரின் கையில்
இனித்திடும் தின்பண்டமாச்சு

ஆண் மற்றும் ஏழையின் நீதி இதுதானோ
நாட்டில் நீதி இதுதானோ
இந்த நிலைமையும் சரிதானோ


சில பேர் வாழ பல பேர் உழைக்கும்
நிலைமையும் சரிதானோ
மனித நீதி இதுதானோ
நாட்டில் நீதி இதுதானோ
இந்த நிலைமையும் சரிதானோ
இந்த நிலைமையும் சரிதானோ

உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை
ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம்
ஓஓஒஓஓஹ்ஏஏஏஏஏஹ் ஹே

உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை
ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம்
எல்லோரும் சமமே
ஹே எல்லோரும் சமமே நாட்டில் யாவுமே
பொதுச் செல்வம் என்றிடுவோம்
நாட்டின் செல்வம் என்றிடுவோம்

எளியோன் துயரை வலியோன் உணரா
இழிநிலை உலகினில் ஏனோ

ஆண் மற்றும் ஏழையின் நீதி இதுதானோ
நாட்டில் நீதி இதுதானோ
இந்த நிலைமையும் சரிதானோ