Sivappana Chinna |
|---|
சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
எனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
இரு கண்கள் வைரமப்பா
இரு கன்னம் தங்கமப்பா
எடுப்பாக வெட்டுதப்பா
இரு கையால் கட்டுதப்பா
அழகு அப்பப்பப்பா
சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
எனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
தலை வாசல் தேடி வந்து
விளையாடும் தங்கப் பந்து
விழி வாசல் மேடை வந்து
அரங்கேறும் வண்ணச் சிந்து
உறவாக யாரும் இல்லை
உயிர் வாழ ஊரும் இல்லை
தனியாக உந்தன் எல்லை
பறந்தோடி வந்த கிள்ளை
இருவர் : உதட்டின் சக்கரைக்குள் முத்தம்
குழைத்துக் கொடு
எடுக்கும் முக்கனிக்குள்
கொஞ்சம் எனக்கும் கொடு
எடுத்தென்ன கொடுத்தென்ன மிச்சம்தான்
சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
உனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
இரு கண்கள் வைரமப்பா
இரு கன்னம் தங்கமப்பா
எடுப்பாக வெட்டுதப்பா
இரு கையால் கட்டுதப்பா
அழகு அப்பப்பப்போ
சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
உனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
கோடி பூக்கள் கூடி நின்று
குளிர் காற்றில் ஆடி நின்று
கதை பேசும் நம்மைக் கண்டு
சரியான ஜோடி என்று
படிக்காத பள்ளிப் பாடம்
பயில்கின்ற கல்விக் கூடம்
திறவாதோ இந்த நேரம்
இவன் சேர வந்த நேரம்
இருவர் : பிரித்துப் புத்தகத்தைத் தொட்டுப்
படிக்கும் மனம்
சிரிக்கும் சித்திரத்தைக் கட்டிப்
பிடிக்கும் தினம்
விரல் பட்டு மடல் மொட்டு துள்ளத்தான்
சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
உனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
இரு கண்கள் வைரமப்பா
இரு கன்னம் தங்கமப்பா
எடுப்பாக வெட்டுதப்பா
இரு கையால் கட்டுதப்பா
அழகு அப்பப்பப்பா
சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
எனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா