Sokku Podi Vachirukken

Sokku Podi Vachirukken Song Lyrics In English


சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா
என்ன சொக்க வெச்சு
எட்டி நிக்கலாமா
வெக்கத்துக்கு
வேலை இல்ல மாமா
நான் வேண்டியத
கேட்டுபுட்டேன் ஆமா

ஹேய் சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா
என்ன சொக்க வெச்சு
எட்டி நிக்கலாமா
அட வெக்கத்துக்கு
வேலை இல்ல மாமா
நான் வேண்டியத
கேட்டுபுட்டேன் ஆமா

எட்டிக் கொஞ்சம்
தள்ளி நில்லு மானே
ஹா
இல்ல எக்கச்சக்கம்
ஆகிப் போகும் தானே
அஹான்
உள்ளதெல்லாம்
சொல்லிபுட்டேன் நானே
அட ஊடல் என்ன
கூடல் என்ன மானே

ஹேய் சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா

நீ தானே நெஞ்சத்துல
நேசத்தையும் பாசத்தையும்
ஏத்தி வெச்ச
பூப்போல பெண் மனச
பொல்லாத ஆசையில
மாத்தி வெச்ச

பெண் பிள்ள நாணம் விட்டா
கன்னித் தமிழ் நாட்டுக்கது ஆகாதம்மா
கண் மூடி ஆச வெச்சா
காளை மனம்
காவலத்தான் தாண்டாதம்மா

தானா கனிஞ்ச கனிதான்
இப்ப நீயும் நானும் தனிதான்
ஏம்மா வெட்டிக் கதைதான்
அட எதுக்கு இந்த வழிதான்

இஷ்டப் பட்டு நெருங்க
இந்த மனம் கெறங்க
எட்டு வெச்சு வந்ததையா
ஒம் மடியில் உறங்க

எட்டிக் கொஞ்சம்
தள்ளி நில்லு மானே
ஹா
இல்ல எக்கச்சக்கம்
ஆகிப் போகும் தானே
பரவாயில்லை
உள்ளதெல்லாம்
சொல்லிபுட்டேன் நானே
ஹ்க்கும்
அட ஊடல் என்ன
கூடல் என்ன மானே
ஹஹஹா

சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா
ஹா
என்ன சொக்க வெச்சு
எட்டி நிக்கலாமா
அய்யோ
வெக்கத்துக்கு
வேலை இல்ல மாமா
நான் வேண்டியத
கேட்டுபுட்டேன் ஆமா


அய்யயோ எட்டிக் கொஞ்சம்
தள்ளி நில்லு மானே

தனியாக நான் படுத்தா
தொந்தரவு பண்ணுதையா
ஒன் நெனப்பு
என நீங்க ஆதரிச்சா
விட்டு விட்டு ஓடுமையா
என் தவிப்பு

அறியாத சின்னப் பொண்ணு
அச்சம் கொஞ்சம்
நாணம் கொஞ்சம் வேணுமம்மா
புரியாத மோகத்துல புத்தி
தடுமாறி விடக் கூடுமம்மா

நீ தான் என் மாப்பிள்ளை
ஏந்து என்ன தோளுல
சொன்னா நீயும் கேட்க்கல
இப்ப சூடு வெப்பேன் நாக்குல

மல்லியப் பூ மணக்க
உள்ள கதை இனிக்க
மத்த கதை என்னத்துக்கு
வித்தைகள படிங்க

சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா
என்ன சொக்க வெச்சு
எட்டி நிக்கலாமா
ஹ்ம்ம்
வெக்கத்துக்கு
வேலை இல்ல மாமா
நான் வேண்டியத
கேட்டுபுட்டேன் ஆமா

எட்டிக் கொஞ்சம்
தள்ளி நில்லு மானே
ஹா
இல்ல எக்கச்சக்கம்
ஆகிப் போகும் தானே

உள்ளதெல்லாம்
சொல்லிபுட்டேன் நானே
ஹஹஹா
அட ஊடல் என்ன
கூடல் என்ன மானே

ஹேய் சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா