Uyirile Uyirile |
---|
உயிரிலே உயிரிலே
புது நதி ஊறுதே உறவிலே
உறவிலே புது கிளை
தோன்றுதே
இரவெனும் ஒரு
நேரம் நீ வந்ததாலே பால்
வண்ணம் கொண்ட நாள்
போல மாற
ஏனோ நீ
பார்த்ததாலே என்
தேசமிங்கே பூந்தோட்டமாக
உன்னை தொடராமலே
தொடர்வேனடா நகர்ந்தாலுமே
நிகர் ஏதடா இணையாத வானும்
மண்ணும் பிரியாது தானடா
உறையாமலே
உறைந்தேனடா கரையாமலே
கரைந்தேனடா பிணையாக
தானே வந்தேன் உன்
கைதி நான்
ஹோ மனம்
சொல்லும் வார்த்தை
ஒன்று வாழ்க்கை இன்று
ஆகுதே
அன்பே உன் பாசம்
தானே என் நெஞ்சில் இன்று
ஊற்றாக ஊற முன்பே உன்
கைகள் தானே என் தோளில்
சேரும் பூமாலையாக
மின்மினி கனவில்
மின்னலின் வரவில்
மின்னிடும் வெண்ணிலவில்
உன் மடியில் உறங்க
அன்பெனும் மழையில்
கொஞ்சிடும் அழகில் அத்தனை
இன்பங்களாய் உன்னருகில் இருக்க
என்னை சேரவே
பிறந்தாயடா நிகழ்காலமாய்
நீயாக திகழ்ந்தாயடா ஹோ
ஹோ
ஹோ மனம்
சொல்லும் வார்த்தை
ஒன்று வாழ்க்கை இன்று
ஆகுதே
அன்பே உன் பாசம்
தானே என் நெஞ்சில் இன்று
ஊற்றாக ஊற முன்பே உன்
கைகள் தானே என் தோளில்
சேரும் பூமாலையாக