Vaa Vaa Vaa Enakkaagavaa Naan |
|---|
வா வாவா வா வா
எனக்காக வா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காணவா வாவாவா
எனக்காக வா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காணவா வாவாவா
எனக்காக வா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காணவா வாவாவா
எனக்காக வா நான் உனக்காக வா
இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இளமேனி தோளில் சாய
இதழோரம் தேனும் பாய
இதழோரம் தேனும் பாய
எனக்காக வா நான் உனக்காக வா
தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தணல் மீது புழுவோ என்றோ
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு
எனக்காக வா நான் உனக்காக வா
மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க
மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க
மலை மீது முகில் தூங்க
மடி மீது நீ தூங்க
மலை மீது முகில் தூங்க
மடி மீது நீ தூங்க
மடி மீது நீ தூங்க வா வா வா
நீராட நதியா இல்லை
நிழல் தேட இடமா இல்லை
பசியாற உணவா இல்லை
பகிர்ந்துண்ண துணையா இல்லை
இருவர் : எனக்காக வா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காணவா வாவாவா
எனக்காக வா நான் உனக்காக வா