Vaanin Kadhal Devathai |
|---|
வானின் காதல் தேவதை
உன்னை வட்டம் போடுதா
உந்தன் நெஞ்சில் தாமரை
சுற்றிக் கூட்டம் போடுதா
காதல் இப்படித்தான்
இப்படித்தான் எட்டிப் பார்க்கும்
கொஞ்சம் விட்டு வைத்தால்
உயிர் வரைக்கும் தின்று தீர்க்கும்
இருவர் : கண்ணுக்குள் நிக்காமலே
பம்பரம் சுற்றி வந்திடும்
மின்னல்கள் மாநாடுகள்
போடுமே தேகம் எங்கெங்கும்
ஆண் கண்ணுக்குள் நிக்காமலே
பம்பரம் சுற்றி வந்திடும்
பெண் மின்னல்கள் மாநாடுகள்
போடுமே தேகம் எங்கெங்கும்
வானின் காதல் தேவதை
ஏஹே ஹே ஹே
ஆண் லால்ல லால்லா லால்லால்லா
லால்லலா லால்ல லால லலலல
பெண் லால்ல லால்லா லால்லால்லா
லால்லலா லால்ல லால லலலல
மின்னல் தெரியும் கிரகம் யாவும்
உனக்குள் தெரிகிறதா
பருவை பிளக்கும் ஆய்வு உனது
உயிரில் நடக்கிறதா
வயலின் இசையும் குழலின் இசையும்
வளையல் தருகிறதா
குளிக்கும் பொழுது வாசித்துக் கொண்டே
பாடப் பிடிக்கிறதா
ஆண் ஹே உண்ணும் நேரத்தில்
விக்கல் வந்து போகுதா
பெண் தன்னம் தனிமையில்
தேகம் வெந்து போகுதா
இந்த இன்பம் இந்த துன்பம்
காதல் சொல்லத்தான்
வானின் காதல் தேவதை
உன்னை வட்டம் போடுதா
உந்தன் நெஞ்சில் தாமரை
சுற்றிக் கூட்டம் போடுதா
வானின் காதல் தேவதை
ஏஹேஹே
சொல்ல நினைக்கும் காதல் பூவாய்
மலர்ந்து சிரிக்கிறது
சொல்ல மறந்த காதல் கல்லாய்
உறைந்து விடுகிறது
நிலவின் அமுதம் மல்லிக் கிண்ணம்
நிறைந்து வழிகிறது
பறவை பேசும் காதல் மொழியில்
பொழுது புலர்கிறது
பெண் பூக்கள் பூப்பதே இங்கு
காதல் சொல்லத்தான்
ஆண் இலைகள் யாவுமே
காதல் தோரணங்கள்தான்
எங்கும் எதிலும் கேட்கும் ஓசை
காதல் காதல்தான்
பெண் வானின் காதல் தேவதை
ஆண் உன்னை வட்டம் போடுதா
பெண் உந்தன் நெஞ்சில் தாமரை
ஆண் சுற்றிக் கூட்டம் போடுதா
காதல் இப்படித்தான்
இப்படித்தான் எட்டிப் பார்க்கும்
கொஞ்சம் விட்டு வைத்தால்
உயிர் வரைக்கும் தின்று தீர்க்கும்
ஆண் கண்ணுக்குள் நிக்காமலே
பம்பரம் சுற்றி வந்திடும்
பெண் மின்னல்கள் மாநாடுகள்
போடுமே தேகம் எங்கெங்கும்
வானின் காதல் தேவதை
ஏஹே ஹே ஹே