Varuvaya Vel Muruga |
---|
வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கையின் கோவிலிலே
வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
தங்கையின் கோவிலிலே
அண்ணனுக்கு பெண் பார்க்க
வரும் அண்ணியை என் கண் பார்க்க
அஹ ஹஹஹா
அஹ ஹஹஹா ஹாஹாம்ம்ம்ம்
அண்ணனுக்கு பெண் பார்க்க
வரும் அண்ணியை என் கண் பார்க்க
என் தங்கையின் துணையை நான் பார்க்க
அந்த இன்பத்தை நீ பார்க்க
நீ வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
தங்கையின் கோவிலிலே
மார்கழியில் மாயவனும்
தை மாசியிலே நாயகனும்
அஹ ஹஹஹா
அஹ ஹஹஹா ஹாஹாஓஹ்ஹோ
மார்கழியில் மாயவனும்
தை மாசியிலே நாயகனும்
திருநாளுக்கு வருகின்ற
விருந்தினர்கள் அவர்
பாவையின் உறவினர்கள்
நீயும் வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கையின் கோவிலிலே
முன்னவனோ ஆலமரம்
தம்பி முளைத்து வரும் தென்னைமரம்
எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம்
எங்கள் வாழ்வே அன்பு மாயம்
நீ வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கையின் கோவிலிலே