Yaaro Nee |
|---|
யாரோ நீ பிஞ்சு
நிலவா பஞ்சு சிலையா
நெஞ்சின் அலையா
யாரோ நீ
பிள்ளை கதிரா
வெள்ளை இரவா
வெயில் மழையா
பல நூறு முட்கள்
கொண்ட மீனாய் நானும்
வாழ்ந்து வந்தேன் உன்
தூண்டில் என்னும் ஒற்றை
முள்ளில் இன்றோ மாட்டி
கொண்டேன்
என் முத்தத்தில்
உன் மீசையை சுமக்கின்ற
ஆண் நான்
என் நெஞ்சிலே
உன் காதலை சுமக்கின்ற
தாய் நான்
யாரோ நீ பிஞ்சு
நிலவா பஞ்சு சிலையா
நெஞ்சின் அலையா
யாரோ நீ
பிள்ளை கதிரா
வெள்ளை இரவா
வெயில் மழையா
பன்னிரெண்டு
உயிர் ஆவோம்
பதினெட்டு
மெய் ஆவோம்
அழகான தாய் தமிழில்
இதழோடு
குறில் ஆவோம்
இரவோடு
நெடில் ஆவோம்
பழகாத வார்த்தையினில்
நான் கட்டும்
சேலையில் ஊர்
மூலையில் நீ தீண்ட
உடல் எங்கும் ரத்தம்
ஓடாதே
உன் பார்வை
அம்புகள் ஊர் நெம்புகோல்
நீ எந்தன் உலகத்தை புரட்டி
போடாதே
ஹ்ம்ம் தேன்
சுரக்கும் பூ உடலை
தித்திக்கும் விரலால்
தீ மூட்டு
யாரோ நீ பிஞ்சு
நிலவா பிஞ்சு நிலவா
பஞ்சு சிலையா பஞ்சு
சிலையா நெஞ்சின்
அலையா நெஞ்சின்
அலையா
இடை மூளை
அழகாக
படிப்போமா
மெதுவாக
ஒரு காதல் நூலகத்தில்
ஒரு வானம்
குடையாக
அதற்குள்ளே
மழையாக
நனைவோமா
நீர் கயிற்றில்
என் காதல்
கவிதைகள் ஒரு புத்தகம்
அதன் மேலே அழகான
அட்டை படம் நீ தான்
நீ தூங்கும்
அறையிலே உன்
அருகிலே பூ பூக்கும்
அழகான குட்டி செடி
நான் தான்
உன் குங்குமம்
என் வேர்வையில்
செம்புலத்தில் நீர்
ஆகாதோ
யாரோ நீ பிஞ்சு
நிலவா பஞ்சு சிலையா
நெஞ்சின் அலையா
யாரோ நீ பிள்ளை
கதிரா வெள்ளை இரவா
வெயில் மழையா