Yaavum Poithaanaa

Yaavum Poithaanaa Song Lyrics In English


ஹாஆஅஆஆ
ஹாஆஅஆஆ

யாவும் பொய்தானா
காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர்தானா
நானும் பிழைத்தேன் உன்னாலே

காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எது வரை இதன் எல்லை
எனக்கொரு பதில் சொல்வாயடா

உனக்கான மௌனத்தில்
எனக்கான வார்த்தையை
நான் தேடி பார்த்ததில் சுகம்
கண்டேன் கண்டேன் நான்தானடா

புவி எங்கும் இதயங்கள்
வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய் உன்னை
கண்டேன் கண்டேன் நான் தானடா

யாவும் பொய்தானா
காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர்தானா
நானும் பிழைத்தேன் உன்னாலே

ஹாஆஅஆஆ
ஹாஆஅஆஆ
ஹாஆஅஆஆ
தரஆஅஆஅ


உந்தன் உறவே
போதும் எனக்கு அன்பே
உந்தன் அணைப்பால்
மூச்சை நிறுத்து அன்பே

கொஞ்சம் மயக்கம்
கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசுதான்
கொஞ்சம் இறக்கம்
கொஞ்சம் இறுக்கம்
ரெண்டும் பெண்மை கேட்கும் பரிசுதான்

ஆசை அனைத்தும்
உன்னை நோக்கியே போக
ஓசை இன்றியேஏ
வார்த்தை அனைத்தும் சாக

தூங்கும் விழிகளில்
தூறல் விழுந்ததாய்
தூரம் குறைகையில் உணர்கிறேன்
எந்தன் அறைகளில்
அடை திரைகளை
விட்டு விலகி நான் மலர்கிறேன்

உனக்கான மௌனத்தில்
எனக்கான வார்த்தையை
நான் தேடி பார்த்ததில் சுகம்
கண்டேன் கண்டேன் நான்தானடா

புவி எங்கும் இதயங்கள்
வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய் உன்னை
கண்டேன் கண்டேன் நான்தானடா