Yenggugiren Nee En Pakkam Ilaiye

Yenggugiren Nee En Pakkam Ilaiye Song Lyrics In English


ஏங்குகிறேன் நீ
என் பக்கம் இல்லையே
உருகுகிறேன் உந்தன்
ஏக்கம் தொல்லையே

ஒரு நாள் உன்னை
நான் நினைத்தேன் சிரித்தேன்
மறு நாள் உன்னை நான்
நினைத்தேன் அழுதேன்

ஏங்குகிறேன் நீ
என் பக்கம் இல்லையே
உருகுகிறேன் உந்தன்
ஏக்கம் தொல்லையே

உன் நெஞ்சினில்
ஒருமுறை சாய்ந்து
கொண்டால் மரணம்
ஏதடா என் கண்ணா
உன்னை ஒருமுறை
அணைத்து கொண்டால்
சரணமாகுமே என் மன்னா

அன்பிலே உன்னை
நான் மனதிலே சுமப்பேனே
இல்லையே என்னை நான்
மண்ணிலே புதைப்பேனே

உன் குறும்பினில்
என்னை சிலிர்க்க வைத்தாய்
மனம் உருகிட என்னுள்
நுழைந்து விட்டாய்
குழந்தையாய் மடிமேல்
சாய்ந்து கொண்டாய் இன்று
குழந்தை ஆகினேன் உன்
நினைவால்


அன்பிலே உன்னை
எண்ணி தவிப்பது தெரியாதா
ஒருமுறை ஒரேமுறை
என்னிடம் வருவாயா

ஏங்குகிறேன் நீ
என் பக்கம் இல்லையே
உருகுகிறேன் உந்தன்
ஏக்கம் தொல்லையே

ஒரு நாள் உன்னை
நான் நினைத்தேன் சிரித்தேன்
மறு நாள் உன்னை நான்
நினைத்தேன் அழுதேன்

மை பீலிங்ஸ்
பார் யூ வில் நெவெர்
டை டில் மை லாஸ்ட்
ப்ரீத் ஆல் ஐ நீட் இஸ்
யூ ஒன்லி யூ மிஸ்ஸிங்
யூ லைக் கிரேசி