Yeno Penne |
|---|
ஏனோ பெண்ணே
என்னை நீங்கி போனாய்
வாழவே நீ எங்கே
அன்பே என்ன செய்வேன்
இதயம் துடிக்கும் நேரம்
இனி மாற்றங்கள் கொண்டு வாழும்
இனி இதயம் துடிக்கும் நேரம்
அது வரைமுறையின்றி ஓடும்
உள்ளம் தேடும் உன்னை தேடும்
நீ மீண்டும் கிடைப்பாயா
ஏனோ பெண்ணே
என்னை நீங்கி போனாய்
வாழவே நீ எங்கே
அன்பே என்ன செய்வேன்
இதயம் முழுதும் நீதான்
அன்பை விதைத்தே வாழ்ந்தாய்
இன்று ஏனோ பெண்ணே
வேரை பிடுங்கி போனாய்
கனவின் மீது ஏனோ
திராவகம் நீ வீசினாய்
கனவை தொலைத்தேன் நானோ
தூக்கம் மறந்தே நின்றேன்
பெண் இல்லா தேசம் அது
உயிர் வாழ யோகம் அது
பெண் உள்ள தேசம் அது
உயிர் வாங்கும் சாபம் அது
எங்கே சென்றாய் உயிரே
கானல் நீரை கூட
தாகம் தீர்த்தே போனாய்
இன்று ஏனோ பெண்ணே
கங்கை இருந்தும் தாகம்
உறவு இல்லை என்றேன்
உலகம் கொடுத்தாய் நீதான்
இன்று ஏனோ பெண்ணே
பாலை வனத்தில் சேர்த்தாய்
நீ இல்லா வாழ்க்கை எது
நீ இல்லா தேசம் அது
நீ இல்லா தேசம் அது
காற்றில்லா வாழ்க்கை அது
அன்பே எங்கே சென்றாய்
ஏனோ பெண்ணே
என்னை நீங்கி போனாய்
வாழவே நீ எங்கே
அன்பே என்ன செய்வேன்
இதயம் துடிக்கும் நேரம்
இனி மாற்றங்கள் கொண்டு வாழும்
இனி இதயம் துடிக்கும் நேரம்
அது வரைமுறையின்றி ஓடும்
உள்ளம் தேடும் உன்னை தேடும்
நீ மீண்டும் கிடைப்பாயா
ஏனோ பெண்ணே
என்னை நீங்கி போனாய்
வாழவே நீ எங்கே
அன்பே என்ன செய்வேன்