Aaru Maname

Aaru Maname Lyric In English


ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை
ஆறு

ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார் உள்ளத்தில்
உள்ளது அமைதி இன்பத்தில்
துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்கு
செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம்
பத்தாகும்

இந்த இரண்டு
கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும்
உண்டாகும்

ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு

உண்மையைச்
சொல்லி நன்மையைச்
செய்தால் உலகம்
உன்னிடம் மயங்கும்

நிலை உயரும்
போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை
வணங்கும்

உண்மை என்பது
அன்பாகும் பெரும் பணிவு
என்பது பண்பாகும்

இந்த நான்கு
கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும்
உண்டாகும்


ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு

ஆசை கோபம்
களவு கொள்பவன்
பேசத்தெரிந்த மிருகம்

அன்பு நன்றி
கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்

இதில் மிருகம்
என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது
பிள்ளை மனம்

இந்த ஆறு
கட்டளை அறிந்த
மனது
ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம்

ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை
ஆறு

ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு

 


Aaru Manamae
Aaru Andha Aandavan
Kattalai Aaru

Sernthu Manithan
Vaazhum Vagaiku
Deivathin Kattalai Aaru

Aaru Manamae
Aaru Andha Aandavan
Kattalai Aaru

Ondrae Solvaar
Ondrae Seivaar Ullathil
Ullathu Amaithi Inbathil
Thunbam Thunbathil Inbam
Iraivan Vagutha Niyathi

Solluku Seigai
Ponnaagum Varum
Thunbathil Inbam Pattagum

Indha Irandu
Kattalai Arintha Manathil
Ella Nanmaiyum Undaagum

Aaru Manamae
Aaru Andha Aandavan
Kattalai Aaru

Unmaiyai Solli
Nanmaiyai Seithaal
Ulagam Unnidam Mayangum

Nilai Uyarumbothu
Panivu Kondaal Uyirgal
Unnai Vanangum

Unmai
Enbathu Anbagum
Perum Panivu
Enbathu Panbagum


Indha Naanku
Kattalai Arintha Manathil
Ella Nanmaiyum Undaagum

Aaru Manamae
Aaru Andha Aandavan
Kattalai Aaru

Aasai Kobam
Kalavu Kolbavan Pesa
Therintha Mirugam

Anbu Nandri
Karunai Kondavan
Manitha Vadivil Deivam

Idhil Mirugam
Enbathu Kalla Manam
Uyar Deivam Enbathu
Pillai Manam

Indha Aaru
Kattalai Arintha Manathu
Aandavan Vaazhum
Vellai Manam

Aaru Manamae
Aaru Andha Aandavan
Kattalai Aaru

Sernthu Manithan
Vaazhum Vagaiku
Deivathin Kattalai Aaru

Aaru Manamae
Aaru Andha Aandavan
Kattalai Aaru

Aaru Maname Song Lyrics From Aandavan Kattalai (1964) | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies