Aagayam Ithanai Naal

Aagayam Ithanai Naal Song Lyrics In English


கல் கல்
கல் கல் கலங்
கலங் கல் கல்
கல் கல் கல் கல்
கலங் கலங் கல் கல்

ஆகாயம்
இத்தனை நாள்
மண்மீது வீழாமல்
தூணாக தாங்குவது
காதல் தான்

ஆண்டாண்டு
காலங்கள் பூலோகம்
பூப்பூக்க அழகான
காரணமே காதல்தான்

பஞ்ச பூதங்கள்
யாவும் காதலின் அடிமை
நாட்கள் ஏழும் காதலின்
கிழமை ஒன்பது கோள்களும்
காதலை சுற்றி வரும்

மரம் ஏற
ஏணியைத்தந்தால்
மலையில் ஏறி
கொடியேற்றும்
குண்டூசி கையில்
தந்தால் கிணறே
தோண்டி விடும்

வெறும் கல்லை
வைரக்கல்லாய் காதல்
பார்வை மாற்றிவிடும்
வெந்நீரில் விட்டால் கூட
காதல் மீன் நீந்தும்

கல் கல்
கல் கல் கலங்
கலங் கல் கல்
கல் கல் கல் கல்
கலங் கலங் கல் கல்

கஷ்டம் காதலுக்கு
இஸ்டம் வெற்றி பெற
வேண்டும் என்றால் காதல்
எதையும் தாங்கிடுமே

முட்டும் கதவுகளை
தட்டும் சறுக்கி விழும்
பாதை எல்லாம் வெற்றி
படியாய் மாற்றிடுமே

அண்ணாந்து
பார்க்காமல் விண்மீனை
வீழ்த்திவிடும் துணையாரும்
இல்லாமல் ஜெயித்திடுமே

இது நெருப்பில்
செய்த இரும்பு வளையமே
இருமனம் விரும்பி துணிந்து
உடையுமே பயங்களும்
தயக்கமும் விடுமுறை
எடுத்திடுமே


வேரோடு வேர்வை
ஊற்றி காதல் என்றும்
வென்று விடும் வெறியோடு
ஓடும் போது தடையை
உடைத்து விடும்

கடல் நீரை
தேக்கும் போது
உப்பாய் தானே
மாறிவிடும் கண்ணீரை
தேக்கும் காதல் முத்தாய்
மாறிவிடும்

கல் கல்
கல் கல் கலங்
கலங் கல் கல்
கல் கல் கல் கல்
கலங் கலங் கல் கல்

காதல் கேட்டுக்
கொண்டு வருமா
தோட்டத்துக்குள் பறவை
வந்தால் வேலி என்ன
தடுத்திடுமா

காதல் காட்டுச்
செடி போலே கட்டளைகள்
போடும் போதும் பூக்கள் பூக்க
மறுத்திடுமா

புலி வாழும்
குகையுள்ளே கிளி
வாழும் வீரத்தை
மனதோடு தந்திடுமே
காதல் தான்

இது போகும்
வழியோ வெற்றுப்பாதை
திரும்பும் வழியோ
வெற்றிப்பாதை விரும்பிய
இதயத்தை அடைந்திடும்
பயணம் இது

கடல் தாண்டும்
பறவைக்கெல்லாம்
வழியில் மரங்கள்
கிடையாது ஆனாலும்
கண்டம் தாண்டும்
சிறகுகள் வலிக்காது

மலையேறும்
எறும்பின் கால்கள்
வெயிலை மிதித்து
உடையாது மனதோடு
காதல் வந்தால் மனிதா
தடையேது

கல் கல்
கல் கல் கலங்
கலங் கல் கல்
கல் கல் கல் கல்
கலங் கலங் கல் கல்