Ammammaa Idhu Ennamma |
---|
அம்மம்மா இது என்னம்மா அம்மம்மா இது என்னம்மாஆரம்பமா ஆசைக்கும் இதழ் ஓசைக்கும் ஆனந்தமா ஆரம்பமா
ஆஆபக்கம் வா என் சொர்க்கம் நீ
பக்கம் வா என் சொர்க்கம் நீ பாய்ந்தோடி வா உன் பாடல் நான் சந்திக்கும் இடம் தித்திக்கும் சாய்ந்தாடி வா என் மேடை நீ
அம்மம்மா இது என்னம்மாஆரம்பமா ஆசைக்கும் இதழ் ஓசைக்கும் ஆனந்தமா ஆரம்பமா
மதுவின் மயக்கம் வந்து மடியில் புரண்டெழுந்து துடிக்க துடிக்க வைத்த கதையோ
மதுவின் மயக்கம் வந்து மடியில் புரண்டெழுந்து துடிக்க துடிக்க வைத்த கதையோ
மதுரம் அதிகம் வைத்து இதய நதியை இன்று குதித்து கொதிக்க வைத்த சுகமோ
ஆணுக்கு தேவை மாணிக்க பாவை ஆனந்த கங்கை தான் இந்த மங்கை
பூவுக்குள் ஆடும் தேனுக்குள் ஆசை பூத்தாடும் நேரம் பூமிக்கு சொர்க்கம்
அம்மம்மா இது என்னம்மாஆரம்பமா ஆசைக்கும் இதழ் ஓசைக்கும் ஆனந்தமா இது ஆரம்பமா
மயக்கம் தெளிந்த பின்னும் மனதில் போதை வந்து மயங்க மயங்க வைத்த கனவோ
அருகில் நெருங்கி வந்து அமுதம் விருந்து வைத்து மனதை இனிக்க வைத்த கலையோ
அங்கங்கள் காதல் ஆட்டத்தின் மேடை மேடைக்கு பாதை போடட்டும் பார்வை பார்வைக்குள் ஆடும் பாவைக்கு போதை போதைக்குள் ஆடும் நாள் எந்தன் தேவை
அம்மம்மா இது என்னம்மாஆரம்பமா ஆசைக்கும் இதழ் ஓசைக்கும் ஆனந்தமா இது ஆரம்பமா ஆனந்தமா இது ஆரம்பமா