Idhayam Muzhuthum Unathu

Idhayam Muzhuthum Unathu Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஆனந்த் சங்கர்

இதயம் முழுதும் உனது உருவம்
வரைந்தேன் மனக் கோயிலில்
நினைவுகளால் வணங்குகிறேன்

இதயம் முழுதும் உனது உருவம்
வரைந்தேன் மனக் கோயிலில்
நினைவுகளால் வணங்குகிறேன்
அழகிய திருமுகம் ஒரு முகம்
உனது வடிவமே இதோ

இதயம் முழுதும் உனது உருவம்
வரைந்தேன் மனக் கோயிலில்
நினைவுகளால் வணங்குகிறேன்
பிறவி முழுதும் நீயே சொந்தம்
எனது இசையில் நீதான் சந்தம்

உறவில் வளரும் வாழ்வின் பந்தம்
உயிரில் கலந்து நான் பாடும் கீதம் தேடும்
இதயம் முழுதும் உனது உருவம்
வரைந்தேன் மனக் கோயிலில்
நினைவுகளால் வணங்குகிறேன்

நிலாவிலே தவழும் மேகம் அதை போலே
உலாவிடும் எனது ஆசை அதன் மேலே
துணை உனை அடைந்திட நான் பூஜை செய்தேன்
கலைமகள் நலம் பெற நீ வாழ்வு தந்தாய்

நான்தானே உந்தன் வாழ்வானேன்
விழியே விழியின் ஒளியே
அணைத்திடும் ஒரு மரணமும் என்னை
பிரித்திட இனி முடியுமோ
மறுபிறப்பிலும் உனை நான்
தொடர்ந்து வருவேன் இசையாகும் நீயே


இதயம் முழுதும் உனது உருவம்
வரைந்தேன் மனக் கோயிலில்
நினைவுகளால் வணங்குகிறேன்

அதோ வரும் அலைகள் சேரும் கடல் சாட்சி
அலைக் கடல் தழுவும் வானம் ஒரு சாட்சி
இலை தொடும் தடையிலா காற்றாக மாறி
நினைவெல்லாம் உனை தொட நான் வாழ வேண்டும்

பூமாலை கொண்ட பூஞ்சோலை
பெறவே தருவாய் வரமே
சரித்திரம் அது மறைந்திடும் ஒரு
நெருப்பிலும் மலர் மலர்ந்திடும்
வரும் கனவிலும் உனை நான்
மறவேன் விடிகாலை நீயே

இதயம் முழுதும் உனது உருவம்
வரைந்தேன் மனக் கோயிலில்
நினைவுகளால் வணங்குகிறேன்
அழகிய திருமுகம் ஒரு முகம்
உனது வடிவமே இதோ

இதயம் முழுதும் உனது உருவம்
வரைந்தேன் மனக் கோயிலில்
நினைவுகளால் வணங்குகிறேன்
நினைவுகளால் வணங்குகிறேன்