Ilamanathu Pala Kanavu

Ilamanathu Pala Kanavu Song Lyrics In English


இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே
சிறுவயது புது உறவு
அருகினிலே வருகிறதே

இந்த மனதிற்கும்
வயதிற்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும்
பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே

இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே
சிறுவயது புது உறவு
அருகினிலே வருகிறதே



கொடியிடை
நாணத்தில் நெளிகிறதோ
கனிகளின் பாரத்தில் வளைகிறதோ
மனமொரு
மோகத்தில் விழுகிறதோ
மருவிடும் ஆசைகள் வருகிறதோ

விரல்பட்டு இளமொட்டு
விரியட்டுமே
வெட்கம் விலகட்டும் விலகட்டுமே
இருகையும் இருகையும்
இளநெஞ்சமும்
அன்பை எழுதட்டும் எழுதட்டுமே

புது மலரை முதன் முதலாய்
தொடுவதினால் சுடுகிறதோ
புது மலரை முதன் முதலாய்
தொடுவதினால் சுடுகிறதோ

இளமனது
பல கனவு
விழிகளிலே
வழிகிறதே
சிறுவயது
புது உறவு
அருகினிலே
வருகிறதே

இந்த மனதிற்கும்
வயதிற்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும்
பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே


இளமனது
பல கனவு
விழிகளிலே
வழிகிறதே
சிறுவயது
புது உறவு
அருகினிலே
வருகிறதே



அழகிய வாசல்கள்
திறந்திடுமோ
அதிலொரு ஆனந்தம் பிறந்திடுமோ
தலையணை வேதங்கள்
விளங்கிடுமோ
தொடங்கிய ராகங்கள் தொடர்ந்திடுமோ

இளமைக்குள் விளைகின்ற
எழில்வண்ணமே
இங்கு மலரட்டும் மலரட்டுமே
தனிமைக்குள் எரிகின்ற
துயர் வெள்ளமே
இன்று வடியட்டும் வடியட்டுமே

புது உலகம் அதிசயமாய்
விழிகளிலே தெரிகிறதோ
புது உலகம் அதிசயமாய்
விழிகளிலே விரிகிறது

இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே
சிறுவயது புது உறவு
அருகினிலே வருகிறதே

இந்த மனதிற்கும்
வயதிற்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும்
பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே

இளமனது
பல கனவு
விழிகளிலே
வழிகிறதே
சிறுவயது
புது உறவு
அருகினிலே
வருகிறதே