Karupazhagi

Karupazhagi Song Lyrics In English

பாடல் ஆசிரியர் : ராகதீபன் மற்றும் ஓவிய உமாபதி

உன் வாசம் என்னை இழுக்க திசை மாறி போகிறேன் உன்கூட நான் வாழ வரமொன்னு கேட்கிறேன்

கருப்பழகி கள்ள சிரிப்பழகி உன் கன்ன குழியில் நான் விழுந்தேன் டி கரு கருபழகி செம்ம இடுப்பழகி உன் நடையில நான் தான் விழுந்தேன் டி

உன்னை பார்த்தாலே கண்ணு தானாலே எட்டி பார்த்தா தான் அட ஓரமா என்னை பார்க்காத கொஞ்சி பேசாத அட நான் தாறேன் முத்தம் போதுமா

ஒத்தயில ஒத்தையில ஏறெடுத்து போற புள்ள நெத்தியில பொட்டு வெச்சி ஊரறிய வாடி புள்ள

வெட்டருவா மீசைக்காரன் வெக்கப்பட்டு நானும் நின்னா ஒட்டு மொத்தமாக உன்னை சாச்சி புட்ட வாடி புள்ள

கருப்பழகி கள்ள சிரிப்பழகி உன் கன்ன குழியில் நான் விழுந்தேன் டி கரு கருபழகி செம்ம இடுப்பழகி உன் நடையில நான் தான் விழுந்தேன் டி

ஓ என்னை நீயும் என்னடா செஞ்ச உள்ளுக்குள்ள உருகுறேன் நான் கண்ண நேரா பார்த்து நீ என்னை காதல் சொல்லி மயக்குறடா

கருப்பழகி உன் நினைப்புல கரையுறேன் உசுருக்குள் உருகுறேன் உறவா கருப்பழகா நான் உன்னை மட்டும் நெனைக்கிறேன் உயிர நான் கொடுக்கறேன் வரமா

தனியா தனியா தவிக்க வச்ச தன்னன் தனியா உருக வச்ச உன்னை உயிரா உயிரா உணர வச்சேன் இந்த நொடியில கலங்க வச்சேன்