Kozhi Koovum

Kozhi Koovum Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

அஹா ஹாஹா ஹா ஹான்
அஹா ஹாஹா ஹா ஹான்

கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

அட கேட்காத சங்கதி
எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு
நல்ல நாளு
ஹரே வா வா வா வா

கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

மெத்தை ஒண்ணும் தேவையில்லை
கத்துக்கொள்ளும் பாடமில்லை
மொத்தமா பூத்த முல்லை
வித்தையுள்ள வெடலப்புள்ள

படிச்சா வருமா
புடிச்சா விடுமா
நெனைச்சா தருமா
இரும்மா கொடும்மா

எட்டாத கனியுமில்ல
எடுத்து உண்ண தடையுமில்ல
கட்டாத காளையும் இல்ல
காவலுமில்ல

ஏறாத மலையினிலே
ஏறிவரும் வேளையிலே
மாறாத ஆசை இது தீரவுமில்ல

வருவேன் தனியே
புது மாங்கனியே

கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு ம்ஹும் ம்ஹும்
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி ஆஹஹா ஹா

அட கேட்காத சங்கதி
எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு
நல்ல நாளு
ஹரே வா வா வா வா
வா வா வா வா

கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
ம்
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா
ம்ஹஹ்ஹா


முத்தத்துல மாலை கட்டு
வெக்கத்தையும் ஓரம் கட்டு
மொத்தமா கேக்கணுமா
அள்ளி அள்ளி அணைச்சிக்கிட்டு

நெனைச்சா சொகமா
நெதமும் இதமா
தனியா வரவா
தரவா பதமா

கட்டான சரிகப்பட்டு
கலைஞ்சதென்ன அழுக்குப்பட்டு
எப்போதும் விருப்பப்பட்டு
எழுதுங்க பாட்டு

பொன்னான உடலிருக்கு
உடலுக்குள்ளே கடலிருக்கு
கண்ணான மாமனுக்கு
காட்டணும் கணக்கு

மெதுவா மெதுவா
தொடணும் பொதுவா

கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

அட கேட்காத சங்கதி
எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு
நல்ல நாளு
ஹரே வா வா வா வா

கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா