Madha Vedhanayagi Un

Madha Vedhanayagi Un Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஜி தேவராஜன்

மாதாவேதநாயகி
உன் மகளின் குறையை கேளம்மா

மாதாவேதநாயகி
உன் மகளின் குறையை கேளம்மா
ஏழை என்னை ஆதரி
நீ இன்றேல் வாழ்வும் ஏதம்மா
மாதா

சிலுவை கொண்ட நிழலைத் தேடி
பறவை ஒன்று வந்தது
என் திருவே தாயின் உருவே என்று
கவிதை பாடி நின்றது

மெழுகாய் உனது கோயிலில் நான்
உருகும் இந்த வேளையில்
கருணை காட்டு அன்னையே
உனை பணிந்தேன் எந்தன் அன்னையே
அன்னையே அன்னையே


உன் பாதம் எங்கள் ராஜ சபை
அது பாவம் இல்லா ஞான சபை
வேதம் போற்றும் தத்துவம் நீ என்
விழிகள் தீட்டும் சித்திரம் நீ

வானம் பூமி ஆனவள் நீ
என் தேவன் தன்னை ஈன்றவள் நீ
நோயைத் தீர்க்கும் மருந்தானாய்
பசி நேரும்போது விருந்தானாய்
அன்னையே அன்னையே

மாதாவேதநாயகி
உன் மகளின் குறையை கேளம்மா
ஏழை என்னை ஆதரி
நீ இன்றேல் வாழ்வும் ஏதம்மா
மாதா